சென்னை ஒமாந்தூரார் அரசினர் தோட்டம் ஆக்கிரமிப்பா… மாமூல் வசூலா/ CHENNAI GOVT ESTATE ENCROACHMENT..

சென்னை ஒமாந்தூரார் அரசினர் தோட்டம் முழுவதும் தனியார் பொறியியல் கல்லூரிகள் மற்றும் மருத்துவக் கல்லூரிகளின்  வாகனங்கள், தனியார் பேருந்துகள், பத்திரிகை அலுவலகத்தின் வாகனங்கள், பழைய இரும்பு கடைக்கு போக வேண்டிய வாகனங்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. ஆக்கிரமிப்பா.. பார்க்கிங் செய்ய மாமூல் வசூலா என்ற கேள்வி எழுந்துள்ளது..

 சென்னை ஒமாந்தூரார் அரசினர் தோட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர்களின் விடுதி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களின் விடுதி, அரசு மருத்துவக்கல்லூரி, கலைவாணர் அரங்கம், அரசு விருந்தினர் மாளிகை, சென்னை பத்திரிகையாளர் மன்றம் ஆகியவைகள் உள்ளது.

 இப்படி வி.வி.ஐ.பிகள் வலம் வரக்கூடிய இடத்தில் தனியார் பேருந்துகள், தனியார் கல்வி நிறுவனங்களின் வாகனங்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது கேவலமாக உள்ளது.

 சென்னை ஒமாந்தூரார் அரசினர் தோட்டத்தை பொதுப்பணித்துறை அதிகாரிகளும், திருவல்லிக்கேணி காவல்துறை அதிகாரிகளும் கூட்டணி அமைத்து பார்க்கிங் செய்ய மாமூல் வசூல் செய்து வருகிறார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

 பொதுப்பணித்துறை அதிகாரிகளை கேட்ட போது, காவல்துறை அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது என்று அலட்சியமாக பதில் சொல்லுகிறார்கள்.. பொதுப்பணித்துறை அதிகாரிகள் கட்டுப்பாட்டில் உள்ள அரசு இடம் தானே நீங்கள் நடவடிக்கை எடுக்கலாமே என்று கேள்விக்கு சிரித்துக்கொண்டே பதில் சொல்லாமல் செல்போன் இணைப்பை துண்டித்தார்கள்..

Comments

comments