செங்குன்றம் ஏரி நீர் பிடிப்பு பகுதி 118.89 ஏக்கர்…வேல் டெக் நிறுவனத்துக்கு தாரைவார்ப்பு..

தமிழக அரசில் ராம்மோகன்ராவ் ஐ.ஏ.எஸ்[ஒய்வு] அதிகாரமையத்தில் இருந்த போது ஆந்திரா மாநிலத்திலிருந்து கல்வி வியாபாரிகள் தமிழ்நாட்டுக்குள் நுழைந்து ஏரி,குளம், அனாதீனம் நிலங்களை ஆக்ரமித்து கல்வி வியாபாரம் தொடங்கிவிட்டார்கள்..

   1997ல் கல்வி வியாபாரம் செய்ய தமிழ்நாட்டுக்கு நுழைந்த டாக்டர் ரங்கராஜன், டாக்டர் சகுந்தலா ரங்கராஜன் தம்பதியினர் சென்னை புறநகர் பகுதியும், திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த  பகுதிகளில் உள்ள ஏரி,குளம், அனாதீனம் நிலங்களை ஆக்ரமித்து கல்வி வியாபாரத்தில் கொடிக்கட்டி பறக்கிறார்கள்.

 திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மோரை கிராமத்தில் அரசுக்கு சொந்தமான அனாதீனம் நிலங்களை வருவாய்த்துறை அதிகாரிகள் துணையுடன் வளைத்து போட்டு வேல் டெக் கல்வி நிறுவனம் நடத்தி வருகிறார்கள்.

 ராம்மோகன்ராவ் ஐ.ஏ.எஸ், தமிழக முதல்வரின் முதன்மை செயலாளராகவும், நிழல் முதல்வராகவும் இருந்த போது வேல் டெக் கல்வி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் டாக்டர் ரங்கராஜன் சந்தித்து, செங்குன்றம் ஏரி நீர்ப் பிடிப்பு பகுதியில் உள்ள 118.89 ஏக்கர் நிலங்களை எங்களுக்கு குத்தகைக்கு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

 ராம்மோகன்ராவ் ஐ.ஏ.எஸ், உடனடியாக சென்னை பெரு நகர வளர்ச்சிக்குழுமத்தின் உறுப்பினர் –செயலாளராக இருந்த/இருக்கும் வெங்கடேசன் ஐ.ஏ.எஸ், கார்த்திக் ஐ.ஏ.எஸ், திருவள்ளூர் மாவட்ட ஆட்சித்தலைவரும், ராம்மோகன்ராவ் பினாமியுமான வீர ராகவராவ் ஐ.ஏ.எஸ் உடன் ஆலோசனை செய்தார்.

 சென்னை பெரு நகர வளர்ச்சிக்குழுமம் அறிவிக்கை எண்.ஆர்1/ப்2/2015ல்  தினந்தந்தி நாளிதழில் அறிவிப்பு வெளியிடுகிறது. அதில் செங்குன்றம் ஏரி நீர் பிடிப்பு பகுதி, நில உபயோகம் குறிப்பிடாத பகுதியில் திருவள்ளூர் மாவட்டம் மோரை கிராமத்தில், வெள்ளனூர் கிராமத்தில் உள்ள 118.98 ஏக்கரை  நிறுவன உபயோகப் பகுதியாக மாற்ற மக்கள் கருத்துகள், ஆலோசனைகளை கேட்பதாக அறிவித்தது. ஆனால் இந்த கருத்து கேட்பு கூட்டத்துக்கு மக்கள் வரவில்லை. ஆனால் பெரு நகர வளர்ச்சிக்குழுமம் அதிகாரிகள், திருவள்ளூர் மாவட்ட ஆட்சித் தலைவர் மக்களிடம் கருத்து கேட்டதாக கோப்புகளை உருவாக்கினார்கள்…

 ஆர்.எஸ். டிரஸ்ட் (கோப்பு எண்.ஆர்1/2735/2015) 32.55 ஏக்கர், வேல் டிரஸ்ட்( கோப்பு எண்.ஆர்1/2736/2015) 11.78 ஏக்கர், வேல் ரங்கராஜன் டாக்டர் சகுந்தலா(கோப்பு எண்.ஆர்1/2737/2015) 27.72 ஏக்கர், ஸ்ரீவேல் ரங்கராஜன், டாக்டர் சகுந்தலா(கோப்பு எண்.ஆர்1/2738/2015) 46.84ஏக்கர் ஆக மொத்தம் 118.89 ஏக்கர் செங்குன்றம் ஏரி நீர் பிடிப்பு பகுதியில் உள்ள நிலங்கள் நிறுவன உபயோகப் பகுதியாக மாற்றப்பட்டு தாரை வார்க்கப்பட்டுள்ளது.

 செங்குன்றம் ஏரி நீர் பிடிப்பு பகுதி 118.89ஏக்கர் வேல் டெக் கல்வி நிறுவனத்திற்கு கொடுக்கப்பட்டத்தில் முக்கிய பங்கு வகித்த அதிகாரிகள் பட்டியலில் ராம்மோகன்ராவ் ஐ.ஏ.எஸ் மற்றும் வீரராகவ ராவ் ஐ.ஏ.எஸ், வெங்கடேசன் ஐ.ஏ.எஸ், கார்த்திக் ஐ.ஏ.எஸ்,  வீட்டு வசதித்துறை செயலாளர் டி.பி.யாத்வ் ஐ.ஏ.எஸ் என்ற பட்டியல் நீளுகிறது…

 இந்த நீர் பிடிப்பு பகுதி தாரை வார்க்கும் பிரச்சனையை மத்திய புலனாய்வுத்துறை விசாரிக்க தொடங்கி உள்ளது..

 சென்னை பெரு நகர வளர்ச்சிக்குழுமத்தில் தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005ன்படி ஒன்பது மாதங்களுக்கு முன்பு கேட்ட போது, இன்னும் இறுதி முடிவெடுக்கவில்லை என்று தகவல் அளித்தார்கள்..ஆனால் 2017ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் செங்குன்றம் ஏரி நீர் பிடிப்பு பகுதி 118.89ஏக்கர் வேல் டெக் நிறுவனத்துக்கு தாரை வார்த்துவிட்டார்கள் என்று அதிகாரிகள் கூறினார்.

 இப்படி நீர் பிடிப்பு பகுதியெல்லாம், தனியார் கல்வி நிறுவனங்களுக்கு, தாரைவார்த்தால், பிறகு எப்படி ஏரியில் நீர் வரத்து அதிகமாகும்…பிறகு எப்படி நிலத்தடி நீர் மட்டம் உயரும்…அரசு அதிகாரிகள் பதில் சொல்லுவார்களா?

 

 

 

 

Comments

comments