சூரப்பா  கன்னடர் – சரி…525 பேரூராட்களின்  e- accountsயை…விலைக்கு வாங்கிய நிறுவனம்..சித்தரமையாவின் உறவினர்…

 

அண்ணா பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக நியமிக்கப்பட்ட சூரப்பா, கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர் என்று அறிக்கை போர் நடத்தும், அரசியல் கட்சிகளே உங்களுக்கு அடுத்த அதிர்ச்சி தகவல்…

தமிழக அரசின் உள்ளாட்சித்துறையின் கீழ் செயல்படும் 525 பேரூராட்சிகளின் e- accountsன் பொறுப்பை உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்த கே.பி முனுசாமி Pre –Matrix software நிறுவனத்திடம் விலைக்கு விற்றார்.. இந்த நிறுவனம் கே.பி.முனுசாமியின் பினாமி நிறுவனம் என்ற செய்தியும் அப்போது பரபரப்பாக பேசப்பட்டது.

Pre –Matrix software நிறுவனத்திடம் e- accountsயை என்ற பெயரில் பேரூராட்சிகளின் ஒட்டு மொத்த நிர்வாகத்தையும் விலைக்கு விற்கப்பட்டுவிட்டது. 525 பேரூராட்சிகளின் மக்கள் தொகை, வீட்டு வரி விவரங்கள், 525 குடி நீர் நிலைமை உள்ளிட்ட அனைத்து விவரங்களும்  , Pre –Matrix software நிறுவனத்திடம் உள்ளது. 16.3.2018ல் பேரூராட்சிகளின் இயக்குநர் எஸ்.பழனிச்சாமி, Pre –Matrix software நிறுவனத்திடம் ஒப்படைக்காத சில பேரூராட்சிகளும் e- accountsயும் ஒப்படையுங்கள் என்று கடிதம் அனுப்பி உள்ளார்…

 Pre –Matrix software நிறுவனம் ஒசூரிலிருந்து செயல்படுகிறது. கர்நாடக முதல்வர் சித்தரமையாவின் ரத்த சம்பந்த தொடர்புடை பெண்ணின் மகன் Pre –Matrix software முக்கிய பங்கு தாரர். சித்தரமையாவின் உறவினருடன் இரண்டு பங்குதாரர்களும் தமிழக அமைச்சரவையில் முக்கிய பதவிகளை வகிக்கும் இரண்டு அமைச்சர்களின் மகன் மற்றும் தம்பி…

 525 பேரூராட்சிகளின் e- accountsயை சித்தரமையாவின் உறவினர் நிறுவனமான Pre –Matrix software நிறுவனத்திடம் விற்பனை செய்தது சரியா…நியாயமா…

     அரசியல் கட்சிகள் என்ன செய்ய போகிறீர்கள்…வாயை மூடிக்கொண்டு…

                வாழ்க… கோஷம் போட போகிறீர்களா…

               

 

Comments

comments