சுதாதேவி ஐ.ஏ.எஸ் மீது-நடவடிக்கை எடுக்க-இமாச்சல பிரதேச அரசு கடிதம்..

        தமிழக அரசின் சத்துணவு திட்டங்களுக்கு முட்டை சப்ளை செய்த  குமாரசாமியின் கிறிஸ்டி புட்ஸ் நிறுவனத்தின் அலுவலகங்கள், பினாமி நிறுவனங்களின் அலுவலகங்கள், குமாரசாமியின் வீடுகளில் வருமான வரித்துறை ஐந்து நாட்கள் ரெய்டு நடத்தியது. இந்த ரெய்டில் குமாரசாமியின் உறவினரும், நுகர்பொருள்வாணிப கழகத்தின் நிர்வாக இயக்குநர் சுதாதேவி ஐ.ஏ.எஸ் வீட்டில் நடந்த ரெய்டில் கோடிக்கணக்கில் பணம், டாலர், ஆவணங்கள் கைப்பற்றியது. ஆனால் சுதாதேவி ஐ.ஏ.எஸ்யை  தமிழக அரசு தற்காலிக பணி நீக்கம் செய்யவில்லை.

   சுதாதேவி ஐ.ஏ.எஸ், இமாச்சலபிரதேச கேடர் ஐ.ஏ.எஸ் அதிகாரி, அயல்பணியில் தமிழக அரசுக்கு வந்து, அதிகாரமையத்தில் இருப்பதால், மக்கள்செய்திமையம் இமாச்சலபிரதேச அரசுக்கு சுதாதேவி ஐ.ஏ.எஸ் தற்காலிக பணி நீக்கம் செய்ய, நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று 9.7.18ல் கடிதம் எழுதியது.

இமாச்சல பிரதேச அரசு, தமிழக அரசின் தலைமைச் செயலாளருக்கு 24.7.18ல் உமாதேவி ஐ.ஏ.எஸ் மீது உரிய நடவடிக்கை எடுத்துவிட்டு, தகவலை தெரிவிக்கும்படி கடிதம் அனுப்பியது.

 ஆனால் இன்று வரை தமிழக அரசு சுதாதேவி ஐ.ஏ.எஸ் மீது தற்காலிக பணி நீக்கம் உள்ளிட்ட எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஏன்… நுகர்பொருள்வாணிப கழகத்தின் நிர்வாக இயக்குநர் பதவியிலிருந்து கூட மாற்றப்படவில்லை..

சுதாதேவி ஐ.ஏ.எஸ்யை தற்காலிக பணி நீக்கம் செய்யாமல், காப்பாற்றப்படுவது ஏன்..எதற்காக…

 வருமான வரித்துறையும் மெளனமாக இருப்பது ஏன் என்ற கேள்விகளுக்கு பதில் கிடைக்கவில்லை…

Comments

comments