சுதாதேவி ஐ.ஏ.எஸ் சஸ்பெண்டில் சிக்கல்- வருமான வரித்துறை – தமிழக அரசு அலட்சியம்..ஊழல் கோப்புகள் அழிப்பு…

இமாச்சல பிரதேச அரசிலிருந்து அயல்பணியில் தமிழக அரசு பணிக்கு வந்த சுதாதேவி ஐ.ஏ.எஸ் பணியில் இரண்டு மாதங்களில், அதிக அனுபவமுள்ள ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட வேண்டிய நுகர்பொருள் வாணிப கழகத்தின் நிர்வாக இயக்குநராக நியமிக்கப்பட்டார். சுதாதேவி ஐ.ஏ.எஸ், கிறிஸ்டி புட்ஸ் குமாரசாமிக்கு நெருங்கிய உறவினர்..

  சத்துணவுக்கு முட்டை சப்ளை செய்த கிறிஸ்டி புட்ஸ் குமாரசாமியின் அலுவலகங்கள், வீடுகளில் வருமான வரித்துறை ஐந்து நாட்கள் அதிரடி ரெய்டு நடத்தியது. சுதாதேவி ஐ.ஏ.எஸ்யின் வீட்டிலும் நடந்த ரெய்டில் பல கோடி பணம், அமெரிக்கா டாலர்கள் சிக்கியது. இதை தொடர்ந்து இமாச்சல பிரதேச அரசுக்கு மக்கள்செய்திமையம், சுதாதேவி ஐ.ஏ.எஸ்க்கு தற்காலிக பணி நீக்கம் செய்ய வேண்டும் என்று கடிதம் அனுப்பியது. ஆனால் சுதாதேவி ஐ.ஏ.எஸ் தற்காலிக பணி நீக்கம் செய்யப்படவில்லை.

 வருமானவரித்துறை சுதாதேவி ஐ.ஏ.எஸ் வீட்டில் ரெய்டு நடந்தது தொடர்பாக இமாச்சலபிரதேச  அரசுக்கு கடிதம் அனுப்பவில்லை.  அதே போல் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் /பொதுத்துறை செயலாளர் இமாச்சல பிரதேச அரசுக்கு சுதாதேவி ஐ.ஏ.எஸ் வீட்டில் வருமான வரித்துறை ரெய்டு தொடர்பாக கடிதம் அனுப்பவில்லை. அதனால் இமாச்சல பிரதேச அரசால் சுதாதேவி ஐ.ஏ.எஸ்யை தற்காலிக பணி நீக்கம் செய்ய முடியவில்லை..

 இமாச்சல பிரதேச அரசு மத்திய அரசின் personnel and training departmentக்கு சில சந்தேகங்களை கேட்டு கடிதம் எழுதியுள்ளது..

  வருமான வரித்துறை ரெய்டில் சிக்கிய சுதாதேவி ஐ.ஏ.எஸ்யை நுகர்பொருள் வாணிப கழகத்தின் நிர்வாக இயக்குநர் பொறுப்பிலிருந்து, தமிழக அரசு மாற்றவில்லை.  சுதாதேவி ஐ.ஏ.எஸ் நுகர்பொருள் வாணிப கழகத்தின் நிர்வாக இயக்குநர் பணியில் தொடருவதால், துவரம்பருப்பு, பாமாயில், சர்க்கரை ஆகிய பொருட்களை கிறிஸ்டி புட்ஸ் மற்றும் குமாரசாமியின் பினாமி நிறுவனங்களுக்கு விதிமுறைகளை மீறி சப்ளை செய்தது, இதில் ஊழல் தொடர்பான கோப்புகளை அழிக்கும் பணி நடந்து வருகிறது.

  தமிழக அரசு உடனடியாக சுதாதேவி ஐ.ஏ.எஸ்யை நுகர்பொருள்வாணிப கழகத்தின் நிர்வாக இயக்குநர் பதவியிலிருந்து மாற்ற வேண்டும்…

 

 

 

 

Comments

comments