சுகாதாரத்துறை -இட ஒதுக்கீடு அமுல்படுத்தாமல்- 49 BIO- Medical Engineers நியமன ஊழல்

தமிழக அரசின் சுகாதாரத்துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு மருத்துவ சேவைக் கழகத்தின் மூலம் கொள்முதல் செய்யப்படும் மருத்துவ உபகரணங்களை மாவட்டம் வாரியாக சரி பார்க்கவும், பராமரிக்கவும் 61 BIO Medical engineers நியமனம் செய்ய முடிவு செய்தது. தமிழ்நாடு ஹெல்த் சிஸ்டம் புராஜெக்ட்டில்  தற்காலிகமாக பணியாற்றிய 49 BIO Medical engineersகளை தமிழ்நாடு மருத்துவ சேவைக் கழகத்தில் இட ஒதுக்கீடு முறையை செயல்படுத்தாமல் நியமனம் செய்துக்கொள்ள முடிவெடுத்து, இதற்கான அரசாணை எண்.3 தேதி 28.2.16ல் வெளியிடப்பட்டது.

49 BIO Medical engineers நியமனம் தொடர்பான கோப்பில் ஆதி திராவிட நலத்துறை மற்றும் பிறப்படுத்தப்பட்ட மிகவும் பிறப்படுத்தப்பட்ட நலத்துறையில் இட ஒதுக்கீட்டிலிருந்து விதி விலக்கு அளிக்க, ஒப்புதல் பெற வேண்டும் என்று கோப்பில் எழுதப்பட்டு இருந்தது. இந்த கோப்பில் 19.2.16ல் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ், 22.2.16ம் தேதி  நிதித்துறை செயலாளர் சண்முகம் ஐ.ஏ.எஸ் , 23.2.16ல் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், 26.2.16 நிதித்துறை அமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் ஆகியோர் கையெழுத்து போட்டார்கள்..

ஆனால் 49 BIO Medical engineers நியமனத்தில் அமைச்சரவை கூட்டத்தில் அப்ரூவல் பெறாமல், ஆதி திராவிட நலத்துறை, பிறப்படுத்தப்பட்ட, மிகவும் பிறப்படுத்தப்பட்ட நலத்துறை, சட்டத்துறைகளில் இட ஒதுக்கீடு முறையை பின்பற்றாமல் இருக்க  அனுமதி பெறாமல் , தலா ரூ10 இலட்சம் இலஞ்சம் வாங்கிக்கொண்டு  49 BIO Medical engineers நிரந்தர பணியில் நியமனம் செய்யப்பட்டுள்ளார்கள்..

 இந்த நியமன மோசடி தொடர்பாக மக்கள்செய்திமையம் தமிழக ஆளுநர் அவர்களிடம்  ஊழல் தடுப்பு இயக்குநரிடமும் புகார் கொடுத்துள்ளது..

 

 

Comments

comments