சுகாதாரத்துறையில் கமிசன் விளையாட்டு…. உமாநாத் ஐ.ஏ.எஸ் அய்யாவுக்கு வணக்கம்… ‘டை சைக்ளோமைன்’ – டெக்சாமெத்தோஜோன் ஊழல்- இருமல் சிரப்பா… அயோடினா..

  தமிழ்நாடு மருத்துவ சேவைக்கழகத்தின் நிர்வாக இயக்குநர் உமாநாத் ஐ.ஏ.எஸ் அய்யாவுக்கு வணக்கம்.. மாத்திரையில் கம்பி இருந்தது என்று செய்தி வெளியானவுடன், அதிரடி நடவடிக்கை எடுத்து, மாத்திரைகளை திரும்ப பெற உத்தரவிட்டதற்கு நன்றி…அதே போல…

    அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு அனுப்பப்பட்ட மாத்திரையில்  ‘டை சைக்ளோமைன்’ மாத்திரையின் அட்டை பகுதியில், ஆஸ்துமாவிற்கு வழங்கும் மாத்திரையின் டெக்சாமெத்தோஜோன்’பெயரும் இடம்பெற்றுள்ளது. நோயாளிகளில் வயிற்றுவலிக்கு வருவோருக்கு ‘டை சைக்ளோமைன்’ மாத்திரை வழங்கவேண்டும். ஆஸ்துமா நோய்க்கு ‘டெக்சாமெத்தோஜோன்’ என்ற மாத்திரை கொடுக்க வேண்டும். ஆனால் மாத்திரை அட்டையில் இரண்டு மாத்திரை பெயரும் உள்ளது. ஆனால் மாத்திரை கவரை பிரித்தால், எந்த நோய்க்கு உள்ள மாத்திரை என்று தெரியவில்லை. இதனால் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

   இருமல் சிரப்பு பாட்டிலில், ஒரு பக்கம் காப் சிரப் என்று உள்ளது. Composition – Providone- Iodne(அயோடின்) என்று உள்ளது.. உண்மையில் அந்த பாட்டிலில் என்ன மருந்து உள்ளது..பாவம் அரசு மருத்துவமனைக்கு செல்லும் அப்பாவி மக்கள்..

  உமாநாத் ஐ.ஏ.எஸ்  அய்யாவுக்கு சொல்வதை சொல்லிவிட்டோம்.. நடவடிக்கை எடுப்பாரா அய்யா.. அமைச்சர் விஜயபாஸ்கர் உடன் கூட்டணி அமைத்துவிடுவாரா..பார்ப்போம்..

ஏழை, நடுத்தர அப்பாவி மக்களின் வாழ்க்கையுடன் விளையாடுகிறது தமிழக அரசின் சுகாதாரத்துறை…

Comments

comments