சுகாதாரத்துறையின் அவலம்-காப் சிரப்பா..காயத்துக்கு போடும் அயோடினா..அமைச்சர் விஜயபாஸ்கரின் அலட்சியம்..

சுகாதாரத்துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு அரசு மருத்துவ சேவைக் கழகம் மூலமாக அரசு மருத்துவமனைகளுக்கு கொள்முதல் செய்யப்பட்ட மருந்துகளின் அவல நிலைய பாருங்கள்..

 அமைச்சர்கள், அதிகாரிகள் உள்ளிட்ட வி.வி.ஐ.பிக்கள் லேசா இருமினால் கூட அப்பல்லோ மருத்துவமனையில் சேர்ந்துவிடுவார்கள்.. ஏழை, நடுத்தர மக்கள் அரசு மருத்துவமனையில் வரிசையில் நின்று, ரூ10,ரூ20 இலஞ்சம் கொடுத்து சிகிச்சை பெற்றுக்கொள்கிறார்..

 அரசு மருத்துவமனையில் ஏழைக்கு காப் சிரப் கொடுத்தார்கள்.. பாட்டில் காப் சிரப் என்று உள்ளது. அதே பாட்டிலில் Composition..Providone Iodine என்று அச்சிடப்பட்டுள்ளது. Iodine புண், காயத்துக்கு போடும் மருந்து..

 பாட்டிலில் இருப்பது காப் சிரப்பா… காயத்துக்கு போடு அயோடின் மருந்தா..இந்த அவலமான நிலையில் தான் மருந்து கொள்முதல் செய்யப்படுகிறது..

  காப் சிரப் சப்ளை செய்த எஸ்.எம். பார்மா பெங்களூர் மீது என்ன நடவடிக்கை எடுத்தார்கள்..

         ஏழை மக்கள் பாட்டிலில் காப் சிரப் இருந்து குடிந்திருந்தால் பிரச்சனை இல்லை. ஆனால் காப் சிரப் என்று எழுதப்பட்ட பாட்டிலில் அயோடின் மருந்து இருந்து குடித்திருந்தால் என்னவாகும்..நினைத்தாலே அதிர்ச்சியாக இருக்கிறது..

 சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதில் மட்டுமே கவனம் செலுத்துகிறார்…அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் அப்பாவி ஏழை, நடுத்தர மக்களைப்பற்றி கவலைப்படுவதில்லை…

Comments

comments