சீரழிந்து போன செய்தித்துறை – 4 – அலுவலக உதவியாளர் குமாருக்கு- ஊடகம் அங்கீகார அட்டை..

செய்தி துறையா.. ஊழல் துறையா -3ல் சங்கர் ஐ.ஏ.எஸ்“Phony”யா என்பதற்கு அர்த்தம் தெரியாமல் பி.ஆர்.ஒ ஷேக்முகமது முதல் கூடுதல் இயக்குநர் வரை லிப்கோ டிக்சனரியை புரட்டினார்கள்..ஆனால் அர்த்தம் கண்டுபிடிக்க முடியவில்லையாம்.. ”Phony” என்பது டம்மி(அதிகாரம் இருந்தும், டம்மியாக செயல்படுவது)..

  துணை இயக்குநர் சுப்ரமணியத்தின் அலுவலக உதவியாளர்(எடுபிடி) ஆல் இன் ஆல் குமாருக்கு ஊடகம் அங்கீகார அட்டை கொடுக்கப்பட்டுள்ளது. அலுவலக உதவியாளருக்கு ஊடகத்துக்கு என்ன சம்பந்தம்.. ஆல் இன் ஆல் குமார், 10 பத்திரிகையாளர்களை பக்கத்தில் வைத்துக்கொண்டு, அமைச்சர்களிடம் கவர் வாங்கி கொடுப்பதுதான் முக்கிய பணி..கட்சிகாரர்களை அமைச்சர் அலுவலகங்களுக்கு அழைத்து சென்று சிபாரிசு கடிதம் வாங்கிக்கொடுத்து, அவர்களிடமிருந்து பணம் வாங்குவதுதான் குமாரின் அடுத்த முக்கிய பணி..

 உண்மையான, மூத்த பத்திரிகையாளர்களுக்கு ஊடகம் அங்கீகார அட்டை கொடுக்க மறுக்கிறார்கள். ஆனால்  அலுவலக உதவியாளர் ஆல் இன் ஆல் குமாருக்கு ஊடகம் அங்கீகார அட்டை கொடுக்கப்பட்டுள்ளது. இதிலிருந்து செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை சீரழிந்துக்கொண்டு இருக்கிறது என்பதற்கு  வேறு என்ன  ஆதாரம் வேண்டும்..

 ஜனவரி 25 தேதியாகிவிட்டது, இன்னும் பிரஸ் பாஸ் பத்திரிகையாளர்களுக்கு கொடுக்கப்படவில்லை..

 அமைச்சர்கள் பத்திரிகையாளர் சந்திப்பு முடிந்தவுடன், அமைச்சரின் உதவியாளர்கள் முக்கிய ஊடகங்களின் நிருபர்களின் வங்கி கணக்கில் மாமூல் பணத்தை போடுகிறார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்..

 டி.டி.வி தினகரன் கட்சியின் சேப்பாக்கம் –திருவல்லிக்கேணியை சேர்ந்த நிர்வாகிக்கு ஊடகம் அங்கீகார அட்டை/பிரஸ் பாஸ் தலைமைச் செயலகம் வரவழைத்து, துணை இயக்குநர் சுப்ரமணியம் தன் கையால் கொடுத்து, புண்ணியம் தேடிக்கொண்டார்…

பத்திரிகைகளுக்கு விளம்பரம் கொடுப்பதில் நடக்கும் ஊழல் தொடர்பாக ஆளுநரிடம் ஆளும் கட்சிக்கு ஆதரவான பத்திரிகை நிர்வாகமே ஆதாரங்களுடன் கொடுத்துள்ளது..

              ஊடகம் அங்கீகார அட்டை விலை ரூ15,000/-

                 பிரஸ் பாஸ் விலை ரூ5000 –ரூ7000/-

                   (ரவுடிகளுக்கு தனி சலுகை உண்டு)

 என்று கூவி..கூவி அரசு அங்கீகார அட்டை விற்பனை செய்யப்படுகிறது..ஊழல் சிக்கி சீரழிந்து போன செய்தித்துறையை இனி ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது…

 

 

Comments

comments