சீரழிந்து போன செய்தித்துறை- கொலை செய்துவிடுவேன்-மிரட்டும் திவாகர் பி.ஆர்.ஒ

செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை ஊழலில் சிக்கி சீரழிந்து போய்விட்டது. சுகாதாரத்துறையின் கீழ் செயல்படும் எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சொசைட்டியில் பி.ஆர்.ஒவாக பணியாற்றும் திவாகர், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நிகழ்ச்சிகளில், செய்தியாளர்களுக்கு கவர் கொடுப்பது, இவரது முக்கிய பணி..அரசு மலர் இணையதளத்தின் ஆசிரியர் பாலமுருகனுக்கு கவர் கொடுக்க திவாகர் மறுக்க, பாலமுருகன் செய்தி வெளியிட பிரச்சனை ஏற்பட்டது. பி.ஆர்.ஒ தான் அரசு ஊழியர் என்பதைப்பற்றி கவலைப்படாமல், பாலமுருகன் செல்போனில் தொடர்புக்கொண்டு கெட்ட வார்த்தைகளால் திட்டிவிட்டு கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டுகிறார் திவாகர்..

  பி.ஆர்.ஒ திவாகர் பேசியது எந்தவிதத்தில் நியாயம்..எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சொசைட்டியில் என்.ஜி.ஒவுக்கு கொடுக்க வேண்டிய நிதி பல கோடி கொடுக்கப்படாமல் இருக்கிறது. அந்த பணம் எங்கே போச்சு என்று தெரியவில்லை. எய்ட்ஸ் கட்டுப்பாடு சொசைட்டியில் திமுக ஆட்சியில் கொடுக்கப்பட்ட முன்பணத்துக்கு கணக்கு கொடுக்காமல் சுமார் ரூ10கோடி நிலுவையில் இருந்தது. ரூ10கோடியும் சில மாதங்களுக்கு முன்பு தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டது. இந்த ஊழல்கள் வெளி வந்துவிடுமோ என்ற பயத்தில் பி.ஆர்.ஒ திவாகர், நிருபர்களை மிரட்டிவருகிறார் என்பதுதான் உண்மை..

 அமைச்சர்களின் உதவியாளர் நிருபர்களுக்கு கவர் கொடுப்பதும், நிருபர்களின் வங்கி கணக்குகளில் பணம் போடுவதை  மக்கள்செய்திமையம் ஏற்றுக்கொள்ளவில்லை. நிருபர்களும் கவர் வாங்கும் பழக்கத்தை நிறுத்திக்கொள்ள வேண்டும். கவர் வாங்கும் நிருபர்கள் பத்திரிகைக்கு பணிக்கு தகுதி இல்லாதவர்கள் என்பதில் மாற்றுக்கருத்து கிடையாது.

 அதிமுக அரசின் ஊழல்கள், நிர்வாக சீர்கேடுகளை அம்பலப்படுத்தும் ஆன் லைன் மீடியாக்களை தடை செய்வது குறித்து ஆலோசனை செய்யப்படும் என்று செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ கோவையில் பேட்டியளித்துள்ளார்..

 அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டியை பார்க்கும் போது, அதிமுக அரசின் ஊழல்கள், நிர்வாக சீர்கேடுகளை அம்பலப்படுத்தும் மீடியாக்களை தடை செய்ய முயற்சி செய்வது, பத்திரிகை ஜனநாயகத்துக்கு எதிரானது. அரசின் ஊழல்களை வெளியிட்டால் பொய் வழக்கில் கைது என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

 அமைச்சர் கடம்பூர் ராஜூ, தெலுங்கு பேசுபவர்களை மட்டுமே உதவியாளராக நியமித்துள்ளது எந்தவிதத்தில் நியாயம்.. தமிழக அரசில் அமைச்சரா…தெலுங்கு பேசும் மாநிலத்தில் அமைச்சரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

 

Comments

comments