சிவகங்கை மக்களவைத் தொகுதி… வெற்றி பாதையில் பரிசுப் பெட்டி தடுமாறும் கை எங்கே தாமரை..எங்கே தாமரை… நீட் தேர்வுக்கு காரணம் நளினி சிதம்பரம்..

சிவகங்கை மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரசு வேட்பாளராக முன்னாள் மத்தியமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்திக் சிதம்பரம், அம்மா முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளராக தேர்போகிபாண்டி, அதிமுக கூட்டணியில் பாஜக வேட்பாளராக எச்.ராஜாவும் களத்தில் உள்ளார்கள்..

 பாஜக, அதிமுக கட்சிகளுக்குள் உட்கட்சி சண்டை, கொடிக்கட்டி பறக்கிறது. எச்.ராஜாவுக்கு சிறுபான்மையினரின் வாக்குகள் கிடைக்காது..எச்.ராஜாவின் கடந்த கால செயல்பாடுகளே, தோல்வி உறுதி செய்கிறது.  எச்.ராஜா போட்டிக்கான களத்திலேயே இல்லை என்பதுதான் லேட்டஸ்ட் தகவல்..எங்கே தாமரை என்ற நிலைதான் உள்ளது..

 நீட் தேர்வை ரத்து செய்யும் என்று காங்கிரசு தேர்தல் அறிக்கையில் உள்ளது. உண்மையில் நீட் தேர்வுக்கு காரணமே கார்த்திக் சிதம்பரத்தின் தாய் நளினி சிதம்பரம்தான்.. நீட் தேர்வு நடத்த வேண்டும் என்று நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் பணியாற்றும் உயர் ஜாதி அதிகாரிகள் சிலர் தங்கள் மகன், மகள் டாக்டராக வேண்டும் என்பதற்காக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடிவு செய்து, நளினி சிதம்பரத்தை சென்றார்கள்.. நீட் தேர்வு வேண்டும் என்ற வழக்கில், நளினி சிதம்பரம் ஆஜராகி வாதாடி நீட் தேர்வுக்கு ஆதரவான தீர்ப்பை பெற்றார்..இந்த செய்தி பலருக்கு தெரியாது.. மக்கள்செய்திமையம் நீட் தேர்வுக்கு காரணம் நளினி சிதம்பரம்தான் என்பதை வெளிச்சத்துக்கு கொண்டு வந்துவிட்டது.. நீட் தேர்வுக்கு காரணமே நளினி சிதம்பரம் என்றால் மக்கள் எப்படி வாக்களிப்பார்கள்..

 ஏழு முறை சிவகங்கை தொகுதியின் எம்.பியாகவும், நிதியமைச்சராகவும் இருந்த ப.சிதம்பரம் தொகுதியின் வளர்ச்சிக்கு பெரிதாக எதுவும் செய்யவில்லை. வங்கிகள், ஏடிஎம் மட்டும் திறக்கப்பட்டது..

 அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளர் பேர்போகிபாண்டியின் களப்பணியை பார்த்து, கார்த்திக் சிதம்பரம் அதிர்ச்சியடைந்துவிட்டார்..கார்த்திக் சிதம்பரம் வேட்பாளராக அறிவிக்கும் முன்பே, மூன்று சட்டமன்றத் தொகுதிகளில் பிரச்சாரத்தை முடித்துவிட்டார் பேர்போகி பாண்டி..

 அதிமுக வாக்குகளை 50 – 60 சதவிகிதம் அம்மா முன்னேற்றக் கழகம் பிரிக்கும், அதனால் கார்த்திக் சிதம்பரத்துக்கு வெற்றி வாய்ப்பு என்ற கூட்டல், கழித்தல் கணக்குகள் இந்த முறை சரியாக இருக்காது..

  சிவகங்கை மக்களவைத் தொகுதியில் கை சின்னத்துக்கும், பரிசுப் பெட்டி சின்னத்துக்கும் இடையேதான்..

 கார்த்திக் சிதம்பரம் கடைசி நேரத்தில் வாக்காளர்களை விலைக்கு வாங்கலாம். அதையும் மீறி பரிசுப் பெட்டி சின்னத்திற்கு மக்கள் மத்தியில் எழுச்சியை ஏற்பத்தியிருக்கிறது. பேர்போகிபாண்டி  களப்பணியில் தொய்வு இல்லாமல் பணியாற்றினால் பண பலத்தையும் மீறி வெற்றி வாய்ப்புகள் அதிகம்..

   டி.டி.வி தினகரன் பிரச்சாரத்தில் மக்கள் தானாக குவிந்த காட்சியை பார்க்கும் போது, பேர்போகிபாண்டி(பரிசுப் பெட்டி) வெற்றி பாதையில் இருக்கிறார் என்பதில் சந்தேகம் இல்லை.

Comments

comments