சிறைக்கு செல்லும் – அடுத்த சத்தியமூர்த்தி – பாஸ்கரன் ஐ.ஏ.எஸ்யா !

ஊரக வளர்ச்சித்துறையின் இயக்குநராக ஐந்தாண்டு காலம் பணியாற்றிய  சத்தியமூர்த்தி ஐ.ஏ.எஸ், சுடுகாட்டு ஊழலில் சிக்கி சிறைக்கு சென்றார். சத்தியமூர்த்தி பாணியில் ஐந்தாண்டு காலமாக ஊரக வளர்ச்சித்துறையில் இயக்குநர் பதவியில், உள்ளாட்சித்துறையின் அதிகாரமையத்தில் வலம் வருகிறார் பாஸ்கரன் ஐ.ஏ.எஸ்..

 திருவாரூர் மாவட்ட ஆட்சித் தலைவராக இருந்த போது, திமுக தலைவரும், முதல்வருமான மறைந்த கலைஞர் கருணாநிதியுடன் மிகவும் நெருக்கமாக இருந்தார் என்பதை மறந்துவிட முடியாது..

 தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவராக இருந்த பாஸ்கரன் ஐ.ஏ.எஸ், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித் தலைவராக பணியாற்றிய போது, புளூ மெட்டல் குவாரியில் நடந்த விதிமுறை மீறி, சட்டத்துக்கு புறம்பாக செயல்பட்ட குவாரிகளுக்கு சுமார் ரூ 230 கோடி அபராதம் விதிக்கப்பட்டது. மேல்முறையீடு என்ற பெயரில் அபராதத்தை ரத்து செய்ய பரிந்துரை செய்தார் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

 சட்டசபை செயலாளராக இருந்த ஜமாலுதீனின் சகோதரி மகனும், ஊரக வளர்ச்சித்துறையின் கூடுதல் இயக்குநருமான அப்துல்ராசிக்கின் நீண்ட நாள் ஆசை, ஐ.ஏ.எஸ் பதவி உயர்வு பெற வேண்டும் என்பதுதான்..

 அப்துல்ராசிக், இயக்குநர் பாஸ்கர் ஐ.ஏ.எஸ், அமைச்சரின் பிஏ வீரபத்திரன் மூலம் முயற்சி செய்து வருகிறார்..

 பாஸ்கரன் ஐ.ஏ.எஸ், அப்துல்ராசிக், வீரபத்திரன் கூட்டணி, இலஞ்சம் தராத பெண் உதவி செயற்பொறியாளரை தொலை தூர மாவட்டத்துக்கு பணி மாறுதல் செய்தார்கள். அந்த பெண் பொறியாளர், இவர்களின் கொள்ளைக்கு அளவே இல்லையா என்று கதறி அழுதுக்கொண்டே  கொடுத்த சாபம் விரைவில் நிறைவேறும் நிலை ஏற்பட்டுள்ளது.

 மாவட ஆட்சித்தலைவர்களின் ஊரக வளர்ச்சித்துறையின் நேர்முக உதவியாளர்கள் ஒவ்வொரும் மாதா, மாதம் கப்பம் கட்ட வேண்டும் என்று நிர்பந்தம் செய்தது தொடர்பான பல புகார்கள், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறையில் குவிந்துள்ளது.

 கிராமங்கள் தோறும் திட்டங்களுக்கான தகவல் பலகை அமைத்தல், பதிவேடுகள், அடையாள அட்டை, திட்டங்கள் சார்பான அனைத்து அச்சு பணிகளும் திண்டுக்கல் சிட்டி பிரிண்டர்ஸ் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

 சிட்டி பிரிண்டர்ஸ் நிறுவனத்தின் மூலம் கோடிக்கணக்கில் கடந்த ஐந்தாண்டுகளில் போலி பில் போடப்பட்டுள்ளது.

 சமூக தணிக்கைச் சங்கத்தின் இயக்குநராக தன் சமூகத்தை சேர்ந்த அண்ணாமலை பிரேம்குமார் நியமித்து, வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தில் அதாவது மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்டத்தில் நடக்கும் பல கோடி ஊழல் கோப்புகளை மறைத்து, பொய்யான புள்ளி விவரங்களை மத்திய அரசுக்கு அனுப்பி வருகிறார்..

 மத்திய அரசின் ஊழல் கண்காணிப்புத்துறையின் வளையத்தில் சிக்கியுள்ளார் பாஸ்கரன் ஐ.ஏ.எஸ்….

 

Comments

comments