சினிமாவினால் பலி ஆடாகும் தமிழக மக்கள்…தமிழக மக்களுக்கு ஏன் குரல் கொடுப்பதில்லை.

தமிழக மக்களின் சினிமா மோகத்தை பயன்படுத்தி, சினிமா தொழில் கொடிக்கட்டி பறக்கும் திரைப்பட இயக்குநர்களின் தமிழக மக்களுக்கு ஏன் குரல் கொடுப்பதில்லை என்ற கேள்வி எழுந்துள்ளது.

  காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் ஏற்பட்ட தாமதம் தொடர்பான போராட்டம், தமிழகம் வந்த மோடிக்கு கருப்புக்கொடி போராட்டம்,  தூத்துக்குடியில்  ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம், கலவரம், துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலி…

 தூத்துக்குடி கலவரம், துப்பாக்கி சூடு தொடர்பான போராட்டத்தில் இயக்குநர் பா.ரஞ்சித் கலந்துக் கொண்டது பாராட்டத்தக்கது… அதே நேரத்தில் தமிழக மக்களால் பணக்கார வர்க்கமாக வலம் வரும் இயக்குநர்கள் எங்கே போனார்கள்…தமிழக மக்களின் சினிமா மோகத்தை வைத்து, சம்பாதிக்கும் இவர்கள், தமிழக மக்களின் பிரச்சனைக்காக, பாதிக்கப்பட்ட தமிழக மக்களுக்காக ரூ100/-கூட செலவு செய்வது இல்லையே ஏன்?

ஹரி :-

   தூத்துக்குடி மாவட்டம் கஞ்சனவிளை கிராமத்தை பிறப்பிடமாக கொண்ட இயக்குநர் ஹரி தமிழ் திரைத் துறையில் இதுவரை 14 திரைப் படங்களை இயக்கியவர். இவர் தனது கிராமத்திற்கு குளம் குட்டைகளை தூர்வாரித் தந்திருந்தாலும் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக இதுவரை குரல் எழுப்பியதில்லை..! ஸ்டெர்லைட் ஆலை பிரச்சனைகள் பெரிய அளவில் விஷ்வரூபம் எடுத்துக் கொண்டு இருக்கும் நேரத்தில் தனது “சாமி-2” படப்பிடிப்பு குழுவினரை திருநெல்வேலியிலிருந்து காரைக்குடிக்கு இடமாற்றம் செய்தார். தனது சொந்த மாவட்டத்தின்  பிரச்சனைகளுக்கு கூட குரல் எழுப்பாமல் ஓடி ஒளிந்தார்…

அட்லீ :-

தமிழக மக்களை காட்சி பொருளாக வைத்து அட்லீ தான் இயக்கிய மூன்று படங்களுக்கு வாங்கிய சம்பளம் மட்டுமே பல கோடி. சமீபத்தில் தமிழகத்தில் நடந்த ஜல்லிக்கட்டை தனது திரைப்படத்தில் காட்சியாக அமைத்து, நானும் ஒரு தமிழன் என்று மார்தட்டிக்கொண்டாலும் அவை அனைத்தும் பணத்திற்கே… 13 உயிர்களை காவு வாங்கிய ஸ்டெர்லைட் பிரச்சினையை கூட காட்சியாக அமைத்து பணம் சம்பாதிக்க முயற்சிக்கலாம் இந்த சுயநல இயக்குனர்… இதுவரை திரைத்துறையினர் நடத்திய எந்த ஒரு போராட்டத்திலும் கலந்துகொள்ளாத இவர்.. பொது விஷயங்களில் கலந்துகொள்வார் என்று எதிர்பார்ப்பது தவறுதான்.

மணிரத்தினம் :-

தமிழ் திரை உலகில் தவிர்க்கமுடியாத இயக்குனர்களில் ஒருவர் மணிரத்னம்…இவர் நட்சத்திர அந்தஸ்து பெற்ற நடிகர்களை வைத்து பல கோடிகளை குவித்தார்.

(குறிப்பு :- இவர் இதுவரை வேற்று மொழி படத்தை இயக்கி இருந்தாலும் கோடிகளை குவித்ததென்னவோ தமிழகத்தில் மட்டும் தான்.) ஆனால் தமிழக மக்களுக்காக இதுவரை எந்த ஒரு போராட்டத்திற்கும் ஆதரவு கூட தெரிவித்ததில்லை. இவரைப்போன்றோர்  எல்லாம் டிவிட்டர் போன்ற சமூக வலைதளங்களில் மட்டும் கருத்து தெரிவிக்க விரும்புகின்றனர்..

ஞானவேல் ராஜா :-

 நடிகர் சங்கத்திலிருந்து, இயக்குனர், தயாரிப்பாளர் சங்கம் வரை இன்று இவர் இல்லாமல் ஒரு அணுவும் அசையாது என்றாகிவிட்டது. ஆனால் இவருக்கும் திரைத்துறைக்கும் ஆரம்பகட்ட சம்பந்தம் என்பது, இவர் ஒரு பிரபல நடிகர் குடும்பத்தை சேர்ந்தவர் என்பது மட்டும் தான். இன்று திரைத்துறையில் தமிழக மக்களால் பல கோடிகள் சம்பாதித்தாலும், பணத்தின் மீதான ஆசை அடங்காமல் காமத்தை மையமாக வைத்து படங்களை தயாரிக்க ஆரம்பித்துவிட்டார். ஆனால் தமிழக மக்கள் பிரச்சினைக்கு குரல் கொடுக்க மாட்டார்.

   மேலே நாங்கள் கூறியது… குறிப்பிட்ட சிலரின் மனதை புண்படுத்த அல்ல… சமூக நோக்கத்திற்காக மட்டுமே…

     தமிழக மக்களால் வாழும் இவர்கள்…!

ஏன் தமிழக  மக்களின் பிரச்சனைக்காக குரல் கொடுப்பதில்லை…?

Comments

comments