சிட்லப்பாக்கம் பேரூராட்சி – நீர் தேக்க தொட்டியில் கசிவு- ரூ3கோடிக்கு ரூ40% கமிசனாம்.. அச்சத்தில் சிட்லப்பாக்கம் மக்கள்..

காஞ்சிபுரம் மாவட்டம், தாம்பரம் அருகில் இருக்கும் சிட்லபாக்கம் பேரூராட்சியில் பகுதியில், சிட்லபாக்கம், மாடம்பாக்கம் பேரூராட்சிகள் மக்களுக்காக மக்களவைத் தேர்தல் விதிமுறைகள் அமுலில் இருக்கும் போது, அவசர, அவசரமாக 4.6.19ல் ரூ3கோடி செலவில் குடி நீர் திட்டப்பணிகள் அமைச்சர்களால் தொடங்கி வைக்கப்பட்டது.

 சிட்லபாக்கம் பேரூராட்சியில் பகுதியில் நீர் தேக்க தொட்டி கட்டப்பட்டது. அமைச்சர்களால் குடி நீர் திட்டபணிகள் தொடங்கி வைத்தவுடன், நீர் தேக்க தொட்டியில் நீர் ஏற்றியதும், நீர் கசிவு ஏற்பட்டது.  நீர் தேக்க தொட்டியில் அடிப்பகுதியில் நீர் சொட்டியது. புதியதாக கட்டப்பட்ட தொட்டியில் நீர் கசிவா என்று மக்கள் அதிர்ச்சி அடைந்தார்கள்..

 நீர் தேக்க தொட்டி நீர் கசிவால் விழுந்துவிடுமோ என்ற பயத்தில் அந்த பகுதிகள் மக்கள் நடமாட முடியாமல் அச்சத்தில் தவிக்கிறார்கள்..

 தாம்பரம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா, நீர் தேக்க தொட்டியை பார்வையிட்டு, மாவட்ட ஆட்சித் தலைவருக்கு புகாரும் அனுப்பி உள்ளார்.

 குடி நீர் திட்டப்பணிகளை ஒப்பந்தம் எடுத்த ஒப்பந்தகாரர் 40 சதவிகிதம் கமிசன் கொடுத்துவிட்டதால், ஏனோ..தானோ என்று குடி நீர் திட்டப் பணிகளை முடித்து உள்ளார். ரூ3கோடி செலவில் நிறைவேற்றப்பட்ட குடி நீர் திட்டத்தால், மக்களுக்கு குடி நீரும் கிடைக்கவில்லை. நீர் கசிவால் நீர் தேக்க தொட்டிக்கு பாதிப்பு ஏற்படுமோ மக்கள் அச்சத்தில் தவிக்கிறார்கள்…

    காஞ்சிபுரம்  மாவட்ட ஆட்சித் தலைவரும், பேரூராட்சிகள் இயக்குநரும் நமக்கேன் வம்பு என்று பெரிய இடத்து விவகாரம்  என்று மக்களைப்பற்றி கவலைப்படாமல் அலட்சியமாக இருக்கிறார்கள்..

Comments

comments

About admin

Check Also

மு.க.ஸ்டாலின் பிறந்தநாள்.

மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தனது பிறந்தநாளையொட்டி சென்னை, வேப்பேரி, பெரியார் திடலில் அமைந்துள்ள தந்தை பெரியார் அவர்களின் நினைவிடத்தில் …

Leave a Reply

Your email address will not be published.