சிக்கிய SPK construction- பொட்டு சுரேஷின் பினாமி நாகராஜ்- கே.என்.நேரு தம்பி ரவிக்கு என்ன தொடர்பு…தொல்லாமூர் கண்ணனிடம் ரூ400கோடி

வருமான வரித்துறை அதிகாரிகள் SPK construction நாகராஜ் அலுவலகங்கள், வீடுகளில் நடத்திய ரெய்டில் சுமார் ரூ225 கோடி பணமும், சுமார் 150 கிலோ தங்க கட்டிகளும் சிக்கியுள்ளது.

 17.7.18ம் தேதி இரவு 7மணிக்கு கிடைத்த தகவலின் படி அண்ணா மேம்பாலம் கீழே சென்னை சிட்டி சாலை செயற் பொறியாளர் இளங்கோவின் அலுவலகத்தில் ரூ4கோடியும், மயிலாப்பூரில் ரூ30 கோடியும், நுங்கம்பாக்கத்தில் ரூ40கோடி ஆக மொத்தம் ரூ74கோடி சிக்கியுள்ளது.. வருமான வரித்துறை அதிகாரிகள் அதிர்ச்சியடைந்துவிட்டார்கள்..

  முதல்வரின் சம்பந்தி சுப்ரமணியன் வீட்டில் ரெய்டு நடந்ததாக வந்த செய்தியை உறுதிப்படுத்தமுடியவில்லை. சுப்ரமணியன் ரெய்டு நடக்கவில்லை என்று மறுத்துள்ளார். சுப்ரமணியனுக்கும், நாகராஜனுக்கும் நெருக்கமான ஒப்பந்தகாரர்  பாண்டிச்சேரியை சேர்ந்த TVK construction தொல்லாமூர் கண்ணன் ரூ400கோடியை  பல கார்கள் மூலம் பாண்டிச்சேரிக்கு கொண்டு சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. பாண்டிச்சேரியில் பல சாலைகள் கண்ணன் மூலம் எடுத்துள்ளார்கள் என்பது உறுதியாக தெரிகிறது..

  2006திமுக ஆட்சியில் மு.க.அழகிரியின் ஆதரவாளர் பொட்டு சுரேஷ்(கொலை செய்யப்பட்டுவிட்டார்) நாகராஜூக்கு நெருக்கமாக இருந்தார். பொட்டு சுரேஷ், நாகராஜூக்கு தென் மாவட்டங்கள் முழுவதும் பல சாலை பணிகள், பொதுப்பணித்துறை பணிகள் கொடுத்தார். நாகராஜ் மூலம் பல கோடி கருப்பு பணத்தை பொட்டு சுரேஷ் முதலீடு செய்தார். பொட்டு சுரேஷ் கொலை செய்யப்பட்டார். சில நாட்கள் கழித்து பொட்டு சுரேஷ் குடும்பத்துக்கு பல கோடி பணம்  நாகராஜூக்கு செட்டில் செய்துள்ளதாக, வருமான வரித்துறை தகவல் கிடைத்தது. ஆனால் அந்த கோணத்தில் வருமான வரித்துறை விசாரணை மற்றும் ரெய்டு நடத்தவில்லை.

  முன்னாள் அமைச்சர் திருச்சி கே.என்.நேருவின் தம்பி ரவி ரியல் எஸ்டேட், அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டி விற்பனை செய்து வருகிறார். ரவி வீட்டில் நின்ற நாகராஜின் காரின் ரூ24 கோடி பணம் எடுக்கப்பட்டுள்ளது. நாகராஜூக்கு, கே.என்.நேருவின் தம்பி ரவிக்கும் என்ன தொடர்பு.. காரை ரவி வீட்டில் நிறுத்த வேண்டிய அவசியம் என்ன என்ற கோணத்தில் வருமான வரித்துறை விசாரணை நடத்தி வருகிறது…   

 ரஜினிகாந்தின் கபாலி திரைப்படம் கே.என்.ரவி அலுவலகத்தில் சூட்டிங் நடந்தது. அப்போது நாகராஜ் ரஜினிகாந்திடம் சினிமா எடுக்க வேண்டும் என்று ஆலோசனை செய்துக்கொண்டு இருந்தராம்..

 SPK construction உடன் தொடர்புடைய ராஜிவ் ரஞ்சன் ஐ.ஏ.எஸ் உட்பட  ஐ.ஏ.எஸ் அதிகாரிகள்,  நெஞ்சாலைத்துறை தலைமை பொறியாளர் சங்கரநாராயணன் உட்பட பல அதிகாரிகள் வீடு, அலுவலகங்களில் ரெய்டு நடத்த வருமான வரித்துறை தயக்கம் காட்டுவது ஏன்? என்பது புரியாதா புதிராக உள்ளது..

  

 

Comments

comments