சிக்கிய வைகுண்டராஜன் -ரூ800கோடி வரி ஏய்ப்பு- மக்கள்செய்திமையம் புகாரில் நடவடிக்கை

வி.வி மினரல்ஸ் நிறுவனத்தின் அலுவலகங்கள், வீடுகளில் கடந்த ஆறு நாட்களாக வருமான வரித்துறை ரெய்டு நடத்தியது.  வருமான வரித்தரப்பில் வி.வி மினரல்ஸ் நிறுவனம் ரூ800கோடி வரி ஏய்ப்பு செய்துள்ளதாகவும், வெளிநாடுகளில் 8 சுரங்கள் இருப்பது கண்டுபிடித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும் போலி நிறுவனங்கள் மூலம் பல நாடுகளில் கோடிக்கணக்கில் பண பரிவர்த்தனை செய்துள்ளது தொடர்பான பல ஆவணங்கள்  வருமான வரித்துறையிடம் சிக்கியுள்ளது.

 வைகுண்டராசன், அவரது தம்பி ஜெகதீசன், வைகுண்டராசன் மகன்களையும் சம்மன் அனுப்பி விசாரிக்க வருமான வரித்துறை முடிவு செய்துள்ளது.

 மேலும் தாது மணல் எடுக்க தடைவிதித்த பிறகும், தூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்தின் பின்னணியில் தாது மணல் எடுத்து, பர்மிட் பெற்று வெளிநாடுகளுக்கு அனுப்பியது தொடர்பான பல ஆவணங்கள் வருமான வரித்துறையிடம் சிக்கியுள்ளது..சுமார் ரூ2000கோடிக்கு அந்நிய செலவாணி மோசடி நடைபெற்றதற்கான ஆதாரங்கள் வருமான வரித்துறையிடம் சிக்கியதால், வைகுண்டராசன் அதிர்ச்சியடைந்துள்ளார்..

 மக்கள்செய்திமையம் 30.11.2013ல் சிபிஐ இயக்குநரிடம் 48பக்கம் புகார் மனு கொடுத்தது.  அந்த மனுவை சிபிஐ The Chief vigilance officer, Minister of Mines New-delhi-115க்கு பரிந்துரை செய்தது.

 அதே போல் நிதியமைச்சர் அருண்ஜெட்லியை நேரில் சந்தித்து  2015 ஜனவரியில் புகார் கொடுத்தது. மக்கள்செய்திமையம் கொடுத்த புகாரின் பேரில் சுமார் நான்கு ஆண்டுகள் கழித்து வருமான வரித்துறை ரெய்டு நடத்தியுள்ளது.

 மறைந்த முதல்வர் ஜெயலலிதா, சுகன்தீப்சிங்பேடி ஐ.ஏ.எஸ் தலைமையில் குழு அமைத்தது. அந்த குழு வி.வி.மினரல்ஸ் மூலம் அரசுக்கு ஏற்பட்ட இழப்பு தொடர்பாக விரிவான அறிக்கை கொடுத்தது. ஆனால் அந்த அறிக்கையின் படி நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

 வருமான வரித்துறை ரெய்டில் கிடைத்த ஆவணங்களில் தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறை அதிகாரிகள் மத்திய அரசின் சுங்க இலாகா அதிகாரிகள் பலரும் சிக்கியுள்ளார்கள்..

 மணல் மாணிக்கம் மருமகன் தங்கராஜ் என்கிற ஜெயபால், வி.வி மினரல்ஸ் நிறுவனத்தில்

பங்கு தாராக இருப்பது, வருமான வரித்துறை ரெய்டு நடத்திய போது கிடைத்தது. தங்கராஜ் என்கிற ஜெயபாலும் விசாரணை வளையத்தில் சிக்கியுள்ளார்..

 வருமான வரித்துறை விரிவான அறிக்கை, சில நாட்களுக்கு முன்பு, மத்திய அரசுக்கு அனுப்பி உள்ளது..

 

Comments

comments