சர்கார் படத்தில் இலவச பொருட்கள் எரிப்பு-தாம்பரத்தில் எரிந்த போது- அதிமுகவினர் எங்கே? எரிந்த பின்னணி என்ன?

நடிகர் விஜய் நடித்த சர்கார் படத்தில் அதிமுக அரசில் விலை இல்லாமல் இலவசமாக கொடுத்த மிக்சி, கிரைண்டர், பேன் ஆகிய மின்சாதனப் பொருட்களை எரிக்கும் படக்காட்சிக்கு அதிமுக தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவித்து, சர்கார் படம் ஓடும் திரையரங்கம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறார்.

  தாம்பரம் நகராட்சி செயல்பாட்டில் இயங்கும் சேலையூர் நகராட்சி பள்ளியில்  உள்ள மின்சாரம் இல்லாத ஒரு அறையில் மக்களுக்கு இலவசமாக கொடுக்க வேண்டிய மிக்சி, கிரைண்டர், டேபிள் பேன் குவித்து வைக்கப்பட்டு இருந்தது.  2017ம் ஆண்டு மார்ச் 15ம் தேதி மின்சார இணைப்பே இல்லாத அறையில் உள்ள வைக்கப்பட்டு இருந்த மிக்சி,கிரைண்டர், பேன் ஆகிய மின்சாதான பொருட்கள் எரிந்து நாசமாகியது.

 நகராட்சி மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் மின் கசிவினால் தீ பிடித்தது என்று கோப்பை மூடிவிட்டார்கள்..

  1. மின் இணைப்பே இல்லாத பள்ளியின் அறையில் மட்டும் மின் கசிவு எப்படி ஏற்படும்?
  2. விலை இல்லாமல் மக்களுக்கு வழங்க வேண்டிய மிக்சி, கிரைண்டர், பேன் பொருட்களை தாம்பரம் நகராட்சி பள்ளியில் ஏன் குவித்து வைக்க வேண்டும். ஏன் மக்களுக்கு கொடுக்கவில்லை?
  3. பல லட்சம் மதிப்புள்ள மின்சாதன பொருட்கள் எரிந்ததற்கு சிறிய விசாரணை கூட நடத்தப்படவில்லை ஏன்?

 சர்கார் படத்தில் விலை இல்லா இலவச பொருட்கள் எரியும் படக்காட்சிக்கு குதிக்கும் அதிமுகவினர், தாம்பரம் சேலையூர் நகராட்சி பள்ளியில் பல லட்சம் மதிப்புள்ளச் விலை இல்லா இலவச பொருட்களான மிக்ஸி, கிரைண்டர், பேன் எரிந்த போது ஏன் குரல் கொடுக்கவில்லை. ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை…

 

 

Comments

comments