சரவணன் ஐ.பி.எஸ் அவர்களுக்கு…11 சந்தேக கேள்விகள்…பதில் கிடைகுமா?.

 1. 4.18 அன்று காவல் இணை ஆணையர் அவர்களுக்கு எழுதிய கடிதத்தை, 23.4.18ம் தேதி மாலை பத்திரிகைகளுக்கு ஏன் வெளியிடவில்லை ?
 2. மக்கள்செய்திமையம் 5.18 கஞ்சா சேதி தெரியுமா என்ற செய்தி சிலைடு வெளியிட்ட பிறகுதான் அன்று மாலைதான் பத்திரிகைகளுக்கு செய்தி அனுப்ப காரணம் என்ன?
 3. இணை ஆணையருக்கு எழுதிய கடிதத்தில் மூன்றாம் பக்கத்தில் மந்தைவெளி போக்குவரத்து மோட்டார் வாகன ஆய்வாளர் அருண்சிவக்குமார் என்று உள்ளது, அதே பக்கத்தில் மூன்றாவது பத்தியில் ஆர்.டி.ஒ அலுவலகத்தில் பணிபுரியும் அருண் சிவக்குமார் என்று உள்ளது. துணை ஆணையருக்கு குழப்பம் எப்படி வந்தது..
 4. 4.18 அன்று குற்ற எண்.237/18 வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் தலைமை காவலர் முத்துகிருஷ்ணன், மோட்டார் வாகன ஆய்வாளர் அருண்சிவக்குமார் இருவரையும் ஏன் செய்யவில்லை..
 5. கோட்டூர்புரம் உதவி ஆணையர் சுதர்சன், ஆறு சவரன் கொள்ளையன் பாஸ்கரை பிடித்தவுடன் பத்திரிகையாளர்களை அழைத்து, பேட்டி கொடுத்தவர். அபிராமபுரம் காவல் நிலையத்தில் 1கிலோ கஞ்சா பிடிப்பட்ட கதையை, தலைமை காவலர் முத்துகிருஷ்ணன் தொடர்பை பற்றி பத்திரிகையாளர்களுக்கு ஏன் பேட்டி கொடுக்கவில்லை.
 6. 5.18ம் தேதி மக்கள்செய்திமையம், போக்குவரத்து ஆணையர் சமயமூர்த்தி ஐ.ஏ.எஸ்யிடம் அருண்சிவக்குமார் தொடர்பாக புகார் கொடுக்கும் வரை, இப்படி ஒரு சம்பவே ஆணையருக்கு தெரியவில்லை. கஞ்சா பிடிப்பட்ட வழக்கு தொடர்பாக போக்குவரத்து ஆணையருக்கு கடிதம் ஏன் எழுதவில்லை.
 7. கோட்டூர்புரம் உதவி ஆணையர் சுதர்சன், தலைமை காவலர் முத்துகிருஷ்ணன் இருவரும் தினமும் சந்தித்து பேசுகிறார்கள்.. கஞ்சா விவகாரம் தொடர்பாக உதவி ஆணையர் சுதர்சன் தொடர்பு இருக்கிறதா என்று விசாரணை நடந்ததா?
 8. மயிலாப்பூர் காவல் நிலைய எல்லையில் முண்டக்கண்ணியம்மன் இரயில் நிலையம் அருகே 1.200 கிலோ கஞ்சா 21.4.18 பிடிப்பட்டது குற்ற எண்.235/18 இது தொடர்பாக பத்திரிகைகளுக்கு ஏன் செய்தி தரவில்லை.
 9. காவலர் முத்துகிருஷ்ணன், கடந்த இரண்டு ஆண்டுகளில் 50 கிலோ கஞ்சா விற்பனை செய்துள்ளார். புழல் சிறையில் காவலர் முத்துகிருஷ்ணன் கஞ்சாவுக்கு 300 கைதிகள் காத்திருக்கிறார்கள் இந்த தகவல் தங்களுக்கு தெரியாமல் போனது எப்படி?
 10. 4.18ல் மயிலாப்பூரில் எல்லையில் 1.200 கிலோ கஞ்சா, 17.4.18ல் அபிராமபுரம் எல்லையில் 1கிலோ அதிகமான கஞ்சா பிடிப்பட்டது. இந்த கஞ்சா எப்படி வருகிறது என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்றதா?
 11. பூச்சிமுருகன் வீட்டில் உள்ள சி.சி.டி.வி கேமிரா பதிவை ஏன் வெளியிடவில்லை…

      

   மயிலாப்பூர் காவல் துணை ஆணையர் சரவணன் ஐ.பி.எஸ் அவர்கள் மிகவும் நேர்மையானவர் என்பதில் எங்களுக்கு சந்தேகம் இல்லை..

  இந்த சந்தேக கேள்விகளுக்கும் தெளிவாக பதில் அளித்தால் நல்லாயிருக்கும்…

 

 

 

Comments

comments