சபேசன் – சரவணனை எங்கே? ரூ15.77கோடியைவிட ரூ11.48கோடி பெரியதாம்.

வேலூர் மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சீனிவாசன் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய அதிரடி ரெய்டில் ரூ11.48கோடி வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க வைத்திருந்ததாக சீனிவாசன் தானாக ஒப்புக் கொண்டதாக முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

DO WEll ASSOCIATE உரிமையாளர் சபேசன் வீட்டில் வருமான வரித்துறை ரெய்டில் ரூ15கோடி சிக்கியது. சபேசன் கொடுத்த தகவலின் பேரில் அமைச்சரின் நிழல் உதவியாளர் சரவணன் வீட்டிற்கு வருமான வரித்துறை அதிகாரிகள் சென்ற போது இலஞ்சம் வாங்கிக் கொண்டு இருக்கும் போதே சரவணன் பிடிப்பட்டார். வீட்டை ரெய்டு செய்த போது ரூ77இலட்சம் சிக்கியது. ஆனால் இருவர் எந்த நடவடிக்கையும் ஏன் எடுக்கப்படவில்லை. சரவணன் அமைச்சர் அலுவலகத்துக்கு வருவதில்லை. கோவை சென்றுவிட்டார். சபேசன் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளார். வருமான வரித்துறை தேர்தல் ஆணையருக்கு ஏன் அறிக்கை அனுப்பவில்லை?

சபேசன் – சரவணன் இருவரும் காப்பாற்றப்படும் மர்மம் என்ன? அமைச்சரை காப்பாற்றவா? வருமான வரித்துறை அதிகாரிகள் பதில் அளிப்பார்களா….

Comments

comments