சங்கர் ஐ.ஏ.எஸ் அகடமி- சங்கர் தற்கொலை மர்மம்..அண்ணாநகர் ரமேஷ்- சாதிக்பாட்சா போல

பெட்டிக்கடை போல் சென்னை அண்ணாநகர், அடையாறு, சேலம், நாமக்கல்,ஈரோடு, கோவை, மதுரை, பெங்களூர், திருவனந்தபுரம் ஆகிய சங்கர் ஐ.ஏ.எஸ் அகடமி என்ற பெயரில் பணக்கார வர்க்கத்தினர் மட்டும் ஐ.ஏ.எஸ் பயிற்சி நடத்தப்பட்டது.

 கவுண்டர் சமூகத்தை சேர்ந்த இரண்டு தொழில் அதிபர்கள் மூலமாக இரண்டு அமைச்சர்கள் சங்கர் ஐ.ஏ.எஸ் அகடமி மூலம் கருப்பு பணத்தை வெள்ளையாக்கினார்கள்.. 2017ம் ஆண்டு செப்டம்பர் மாதம் சங்கர் ஐ.ஏ.எஸ் அகடமியின் அண்ணாநகர் அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிரடி ரெய்டு நடத்தினார்கள். நான்கு மணி நேரத்தில் வருமான வரித்துறையின் உயர் அதிகாரிகளிடமிருந்து போன் வர, வருமான வரித்துறை அதிகாரிகள் ரெய்டை நிறுத்திவிட்டு கைப்பற்றிய பல கோடி பணத்தையும் சங்கரின் மனைவி வைஷ்ணவியிடம் ஒப்படைத்துவிட்டு வெளியேறினார்கள்..

 வருமான வரித்துறை அதிகாரிகள் ஏன் ரெய்டை நிறுத்தினார்கள், கைப்பற்றிய பணத்தை திரும்ப ஏன் கொடுத்தார்கள் என்பது இன்னும் கேள்விக்குறியாக உள்ளது.

 இதை தொடர்ந்து சங்கர் தனக்கு ஏற்பட்ட நெருக்கடியில் தாக்குபிடிக்க முடியாமல் சில நாட்களுக்கு முன்பு தற்கொலை செய்துக்கொண்டார்.

 சங்கர் ஐ.ஏ.எஸ் அகடமி சங்கரனிடம் முதலில் நெருக்கமாக பழகியது, பணத்தை முதலீடு செய்தது நகராட்சி நிர்வாக ஆணையராக இருக்கும் பிரகாஷ் ஐ.ஏ.எஸ்.. இந்த வருமான வரித்துறை ரெய்டுக்கு பிறகு, சங்கர் தொடர்பை குறைத்துக்கொண்டார்..

 உதயச்சந்திரன் ஐ.ஏ.எஸ், சைலேந்திரபாபு ஐ.பி.எஸ், ராதாகிருஷ்ணன் ஐ.பி.எஸ்(ஒய்வு), சதிஷ்குமார் டோக்ரா ஐ.பி.எஸ்(ஒய்வு), ரமேஷ்குமார்கன்னா ஐ.ஏ.எஸ்(ஒய்வு) இப்படி ஒய்வு பெற்ற  ஐ.ஏ.எஸ்,ஐ.பி.எஸ், ஐ.பி.எஸ், ஐ.ஆர்.எஸ் அதிகாரிகள் அனைவரும் சங்கர் அகடமியில் அடைக்கலமானார்கள்.. இதனால் பல காரியங்களை இந்தியா முழுவதும் நடத்தினார். மத்திய, மாநில அரசு இணையான அரசாங்கமே நடத்தி வந்தார்..  தமிழக அமைச்சர் மா.பாண்டியராஜன், சங்கரனுடன் நெருக்கமானார்..

 அண்ணாநகர் ரமேஷ், சாதிக்பாட்சா இருவரின் தற்கொலை பின்னணியில் உள்ள அதிர்ச்சியான செய்திகள் மூடி மறைக்கப்பட்டது. அதே பாணியில் சங்கர் அகடமி சங்கரன் தற்கொலையின் பின்னணியும் மூடி மறைக்கப்படுகிறது.

 சங்கர் ஐ.ஏ.எஸ் அகடமி சங்கரன் தற்கொலை தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டால் தொழில் அதிபர்கள் , தமிழக அமைச்சர்கள், ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள்  பலர் சிக்குவார்கள்..

                     

 

Comments

comments