சங்கர் ஐ.ஏ.எஸ் அகடமி..சங்கரன் தற்கொலை- சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்படுமா?

சங்கர் ஐ.ஏ.எஸ் அகடமியில் ஐ.ஏ.எஸ் பயிற்சிக்கு ரூ1.50 இலட்சம் பயிற்சி கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது.. வங்கி தேர்வு, டி.என்.பி.எஸ்.சி தேர்வு எப்படி எந்த தேர்வுக்கு பயிற்சி அளித்தாலும் இலட்சக்கணக்கில் வசூல் செய்யப்பட்டுள்ளது..பணக்கார மாணவர்கள், ஆங்கில அறிவு உள்ள மாணவர்கள் மட்டுமே பயிற்சிக்கு சேர்க்கப்பட்டார்கள்..

  அரசு பள்ளியில் படித்தால் முழுமையாக ஆங்கில அறிவு கிடைக்குமா? நம்மூர் ஏழை மாணவர்களுக்கு, அரசு பள்ளிகளில் படித்த மாணவர்கள் சேர்க்கப்படவில்லை. கிராமத்திலிருந்து கலெக்டர் ஆகலாம் என்று கனவில் சங்கர் அகடமிக்கு வரும் மாணவ, மாணவிகள் பயிற்சி கட்டணத்தை கேட்டுவிட்டு போய்விட்டார்கள்.. மத்திய அரசின் சமூக நீதித்துறையிலிருந்து நிதி பெற்று எஸ்.சி, ஒ.பி.சி மாணவர்களுக்கு இலவச பயிற்சி என்று சங்கர் அகடமி அறிவித்தது. ஆனால் இலவச பயிற்சி கொடுக்கப்படவில்லை.  மத்திய அரசிடமிருந்து பெறப்பட்ட நிதியில் முறைகேடு நடந்துள்ளது..

 சங்கரன் தற்கொலை, சங்கர் ஐ.ஏ.எஸ் அகடமி மத்திய அரசின் சமூக நீதித்துறையிலிருந்து பெறப்பட்ட நிதியில் முறைகேடு, தமிழக அமைச்சர்களின் கருப்பு பணத்தை வெள்ளையாக்கி கொடுத்தது,  ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ், ஐ.எப்.எஸ், ஐ.ஆர்.எஸ் அதிகாரிகள் கெஸ்ட் லெக்சரர் என்ற பெயரில் பயிற்சி மையத்தில் பணியாற்றியது, ஒய்வு பெற்ற அரசு உயர் அதிகாரிகள் மூலம் தனி அரசாங்கம் நடத்தியது தொடர்பாக சிபிஐ விசாரணை செய்ய வேண்டும் என்று மக்கள்செய்திமையம் புகார் அனுப்பி உள்ளது.

                             

 

 

Comments

comments