கோவை மாநகராட்சி..1.6 மில்லியன் வீடுகள், 400 மில்லியன் டாலருக்கு..SUEZ நிறுவனத்திடம் குடி நீர் சப்ளை விற்பனை

தமிழ்நாட்டில் குடி நீர் பிரச்சனையை தீர்க்க, கூட்டு குடி நீர் திட்டங்கள் செயல்படுத்துப்பட்டு வருகிறது. இந்த திட்டங்கள் உள்ளாட்சி அமைப்புகள் மூலமாக செயல்படுத்தப்படும்.

 முதன் முறையாக கோவை மாநகராட்சியில் பகுதியில் குடியிருக்கும் 1,50,000 குடியிருப்புகளுக்கு சிறுவாணியிலிருந்து குடி நீர் சப்ளை செய்யும் திட்டத்தை பிரான்ஸ் நாட்டில் உள்ள SUEZ நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

 குடி நீர் திட்டத்தை, ஒப்பந்த அடிப்படையில் செய்து முடிக்கப்படும். வீடுகளுக்கு இணைப்பு கொடுத்து, குடி நீர் சப்ளை செய்வது உள்ளாட்சி அமைப்புகள் மூலமாக என்பது தமிழ்நாட்டில் நடைமுறையில் உள்ளது.

   reservoirs, water Network, house connections, water meters, valves etc உள்ளிட்ட அனைத்து பணிகளை செய்ய, SUEZ நிறுவனத்துடன் தமிழக அரசு 400மில்லியன் டாலருக்குஒப்பந்தம் போட்டுள்ளது. ஒரு மில்லியன் என்பது இந்திய மதிப்பில் ரூ10 இலட்சம்.. 400 மில்லியன் ஈரோ டாலர்..தலையை சுத்துகிறதா…நான் கணக்கில் வீக்..அதான் கணக்கு போடுவதை உங்களிடம் ஒப்படைத்துவிட்டேன்…

  கோவை மாநகராட்சியில் குடியிருக்கும் மக்கள், குடி நீர் பிரச்சனை, குடி நீர் இணைப்பு, குடி நீர் பணம் செலுத்துதல் அனைத்தும் SUEZ நிறுவனத்துடன் மட்டுமே தொடர்புக்கொள்ள முடியும்.

 இந்த ஒப்பந்தம் தொடர்பாக SUEZ நிறுவனம்  1.2.18ல் செய்தி குறிப்பு வெளியிட்டுள்ளது.

  கோவை மாநகராட்சி குடி நீர் திட்டங்களை SUEZ நிறுவனத்துக்கு டெண்டர் கொடுத்தது போல, தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து கூட்டு குடி நீர் திட்டங்களை தனியாரிடம் ஒப்படைக்க தமிழக அரசு முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது..

                          தமிழ்நாட்டை இனி யாராலும் காப்பாற்ற முடியாது…

 

Comments

comments