கோயில் சிலைகள் கடத்தல் – முத்தையா ஸ்தபதியின் கடிதம் எங்கே? -வீரசண்முகமணியை ஏன் கைது செய்யவில்லை..

தமிழக அரசின் இந்து அற நிலையத்துறையின் கீழ் செயல்படும் திருக்கோயில்களில் உள்ள பல கோடி மதிப்புள்ள சிலைகள் வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்டுள்ளது. சிலைகள் கடத்தல் தொடர்பாக விசாரணை செய்யும் ஐ.ஜி பொன்மாணிக்கவேல் ஐ.பி.எஸ் ஒரு தலைப்பட்சமாக செயல்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.

 கைது செய்யப்பட்டுள்ள கூடுதல் இணையர் கவிதா நேர்மையானவரா என்ற விவாதத்திற்கு நாம் இப்போது நுழைய விரும்பவில்லை. கவிதா நேர்மையான அதிகாரி என்பதற்கு ஆதாரம் எனக்கு கிடைக்கவில்லை. ஆனால் இந்து அறநிலையத்துறையின் நிழல் ஆணையராக செயல்படும் கூடுதல் ஆணையர் திருமகளை மீது ஏன் வழக்கு பதிவு செய்யவில்லை என்ற கேள்விக்கு பொன்மாணிக்கவேலுவிடம் பதில் இல்லை..

 சிலைகள் கடத்தலில் பங்கு இல்லாவிட்டாலும், எதையும் கண்டுகொள்ளாமல் செயல்பட்ட முன்னாள் அறநிலையத்துறை ஆணையர் வீரசண்முகமணி ஐ.ஏ.எஸ்யை கைது செய்தால் பல உண்மைகள் வெளிவரும். ஆனால் வீரசண்முகமணி கைது செய்யப்படவில்லை. ஐ.ஜி பொன்மாணிக்கவேலை  யாரோ இயக்குகிறார் என்பது மட்டும் தெளிவாக தெரிகிறது..

 காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் திருக்கோயில்  விக்ரகம் சிவன், சுப்ரமணியம், தேவி ஒரே பீடத்தில் உள்ள இந்த சிலைகள் 1000 ஆண்டுகளுக்கு பழமையானது. அதிக அளவு தங்கம் கலந்து செய்யப்பட்டது. நான்கு , ஐந்தாண்டுகளுக்கு முன்பு இந்த மூவரின் சிலைகள் மாற்றப்பட்டுள்ளது. புதிய சிலைகள் செய்து வைக்கப்பட்டுள்ளது என்று முத்தையா ஸ்தபதி 4.5.15ல் ஆணையர் வீரசண்முகமணி ஐ.ஏ.எஸ்க்கு கடிதம் எழுதியுள்ளார். இந்த சிலையை பார்வையிட ஆணையர் உத்தரவிட்டதால் சென்றதாகவும், சிலையை பார்க்கும் போது என்னுடன் செயல் அலுவலர் முருகேசன், அர்ச்சகர்கள் நாகசாமி குருக்கள், ரமேஷ் குருக்கள், மேலாளர் சீனிவாசன், ராஜேந்திரன் மணியம் இவர்களெல்லாம் இருந்தார்கள் என்று கடிதத்தில் கூறியுள்ளார்.

 ஆனால் இது தொடர்பான வழக்கில் ஸ்தபதி முத்தையா, செயல் அலுவலர் முருகேசன், ராஜப்பா, செந்தில், கிருஷ்ணசாமி, சங்கரன், பரத்குமார்,வினோத்குமார், மாசிலாமணி பெயர்கள் உள்ளது. கோயில் குருக்கள் நாகசாமி, ரமேஷ் இருவரும் பெயரும் இல்லை.. ஏன்…

  கோயில்களில் பூஜை செய்யும், கோயில்களை நிர்வாகம் செய்யும் முக்கிய குருக்களின் பெயர்கள் எந்த முதல் தகவல் அறிக்கையிலும் இல்லை..ஏன்…பொன்மாணிக்கவேல் பதில் சொல்லுவாரா?

   இந்து அறநிலையத்துறை கீழ் செயல்படும், வருமான அதிகம் உள்ள கோயில்களில் சிறப்பு பூஜை என்ற பெயரில் தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைத்தது ஏன்? தனியார் நிறுவனங்களுக்கு தாரைவார்த்த   முன்னாள் ஆணையர்கள் தனபால், வீரசண்முகமணி ஐ.ஏ.எஸ்(ஒய்வு), ராஜாராமன் ஐ.ஏ.எஸ்(ஒய்வு) மூவரையும் பொன்மாணிக்கவேல் ஐ.ஜி ஏன் விசாரிக்கவில்லை..

  ஐ.ஜி பொன்மாணிக்கவேல் நேர்மையான அதிகாரி இல்லை. ஆடிட்டர் பாண்டியன் கொலை வழக்கு. செல்வபெருந்தகை கூட்டணியுடன் ஆடிட்டர் பாண்டியன் லாக்கர்கள் திறப்பு இப்படி பல குற்றச்சாட்டுகள் உண்டு..

                            கோயில் சிலைகள் கடத்தல் வழக்கை சிபிஐ விசாரிக்கட்டுமே….

 

 

Comments

comments