கோயம்புத்தூர் TNEB…தலைமைப் பொறியாளர் T. கால்துரையின் ஊழல்…ன்சாரவாரியத்திற்கு ரூ2 கோடி இழப்பு…

 

 நீலகிரி மாவட்டத்தில்  தமிழ்நாடு மின்சாரவாரியத்தின் கண்காணிப்பு பொறியாளராக T. கால்துரை[T.Haldorai] இருந்த போது, அதாவது 2010ல் உதவியாளர் ரவிக்குமார், மக்களின் மின் கட்டணம் செலுத்திய பணம் ரூ83.40 இலட்சத்தை தமிழ்நாடு மின்சாரவாரியத்தின் கணக்கில் செலுத்தாமல் மோசடி செய்துவிட்டார்.

இது தொடர்பாக ஊழல் எதிர்ப்பு இயக்கம், நீதிமன்றத்தில் வழக்கு தொடர, ஜூலை 1, 2016ல் செசன்ஸ் நீதிமன்றம் 2010ம் ஆண்டிலிருந்து 12 சதவிகிதம் வட்டியுடன் ரவிக்குமாரிடமிருந்து வசூல் செய்ய வேண்டும் என்று தீர்ப்பு வழங்கியது.. மோசடி செய்த பணம் ரூ83.40இலட்சம், வட்டி எல்லாம் சேர்த்து ரூ2கோடி..

ஆனால் கண்காணிப்பு பொறியாளர் T.கால்துரை,  ரவிக்குமாரிடமிருந்து வசூல் செய்யவில்லை. இந்த நிலையில் ரவிக்குமார் இறந்து போனார்.. ஊழல் எதிர்ப்பு இயக்கம், ரூ 2 கோடியை ரவிக்குமாரிடமிருந்து வசூலிக்க, நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தாத கால்துரை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், ரூ2 கோடியை கால்துரையிடமிருந்து வசூலிக்க வேண்டும் என்று ஆளுநரிடம் புகார் கொடுத்தார்கள்..

தன் அதிகார பலத்தில், தலைமைப் பொறியாளர் பதவி உயர்வை விலைக்கு வாங்கி, கோயம்புத்தூர் தமிழ்நாடு மின்சாரவாரியத்தின் தலைமைப் பொறியாளராக T.Haldorai நியமிக்கப்பட்டார். ஆனால் ரூ2கோடி வசூலிப்பது தொடர்பான எந்த முடிவை எடுக்கவில்லை. நீதிமன்ற ஆணையை செயல்படுத்த வேண்டிய உயரதிகாரியான T.கால்துரை, செயல்படுத்தாத காரணத்தால் தமிழ்நாடு மின்சாரவாரியத்திற்கு ரூ2கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

உண்மையில் இரவிக்குமார் இறந்து போன பின்னணியை விசாரித்தால் பல பூதங்கள் வெடிக்கும்.. ரவிக்குமாரிடமிருந்து ரூ2கோடியை வசூலிக்க தவறிய, நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தாத கால்துரை தற்காலிக பணி நீக்கம் செய்திருக்க வேண்டும்.

 ஆனால் தலைமைப் பொறியாளர் T. கால்துரை[T.Haldorai]  மார்ச் 31ம் தேதி இரண்டு நாட்கள் ஒய்வு பெற தமிழ்நாடு மின்சாரவாரியம் என்.ஒ.சி வழங்கிவிட்டது எப்படி…ரூ2கோடி இழப்பு ஏற்படுத்திய T.கால்துரை[T.Haldorai] ஜாலியாக ஒய்வு பெறுவதுதான் வேடிக்கையாக உள்ளது…

            எவ்வளவு பணம் கைமாறியது…

       மின்சாரவாரியமா…கொள்ளை வாரியமா..

 

Comments

comments