Warning: Cannot modify header information - headers already sent by (output started at /home/makkalseithi/public_html/index.php:2) in /home/makkalseithi/public_html/wp-content/plugins/wp-super-cache/wp-cache-phase2.php on line 1197
கோயம்புத்தூர் மாவட்டம்.. பறவை காய்ச்சல் மோசடி பில்கள்.. | மக்கள் செய்தி மையம் : MakkalSeithiMaiyam (MSM)

கோயம்புத்தூர் மாவட்டம்.. பறவை காய்ச்சல் மோசடி பில்கள்..

ஊராட்சிகள், பேரூராட்சிகளில் பல கோடிகள்.

கோயம்புத்தூர் மாவட்டம் காரமடை ஊராட்சி ஒன்றியத்தின் கீழ் உள்ள சிங்காநல்லூர் ஊராட்சி, மருதூர் ஊராட்சி, துலாம்பாளையம் ஊராட்சி, சிக்கதாசம்பாளையம், பெலாம்பாளையம், பெல்லாதி, இரும்பொறை, இலுப்பாதிகம், ஒடந்துறை, ஜடாயாம்பாளையம், வெள்ளங்காடு,நல்லந்துரை உள்ளிட்ட அனைத்து ஊராட்சிகளிலும் பறவை காய்ச்சல் நோட்டீஸ் என்று ஒவ்வொரு ஊராட்சியிலும் ரூ5500/- போலி பில் அஸ்வின் பிரிண்டர்ஸ் பெயரில் மோசடி நடந்துள்ளது. இது போல் கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள கிராமங்களிலும் ரூ5500 /- மோசடி பில் போடப்பட்டுள்ளது.

அதே போல் கோட்டூர் உள்ளிட்ட அனைத்து பேரூராட்சிகளிலும் அஸ்வின் பிரிண்டர்ஸ் பெயரில் ஒவ்வொரு பேரூராட்சியிலும் ரூ8775/- என போலி பில் மோசடி நடந்துள்ளது.

  இந்த போலி மோசடி பில்கள்2017 ஆகஸ்டு மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை மாதா,மாதம் போடப்பட்டுள்ளது…

 கோயம்புத்தூர் மாவட்டத்தில் மட்டும் ஊராட்சிகள், பேரூராட்சிகளில் போடப்பட்ட மோசடி பில் மதிப்பு சுமார் ரூ2கோடியை தாண்டும்..

   யார் இந்த அஸ்வின் பிரிண்டர்ஸ்…ஆண்டவனுக்குதான் வெளிச்சம்….

Comments

comments