கோயம்புத்தூர் மாவட்டம்..பறவை காய்ச்சல் பெயரில் பல கோடி..மோசடி பில்கள்..விசாரணைக்கு உத்தரவு..

கோயம்புத்தூர் மாவட்டம் காரமடை ஊராட்சி ஒன்றியத்தின் கீழ் உள்ள சிங்காநல்லூர் ஊராட்சி, மருதூர் ஊராட்சி, துலாம்பாளையம் ஊராட்சி, சிக்கதாசம்பாளையம், பெலாம்பாளையம், பெல்லாதி, இரும்பொறை, இலுப்பாதிகம், ஒடந்துறை, ஜடாயாம்பாளையம், வெள்ளங்காடு,நல்லந்துரை உள்ளிட்ட அனைத்து ஊராட்சிகளிலும் பறவை காய்ச்சல் நோட்டீஸ் என்று ஒவ்வொரு ஊராட்சியிலும் ரூ5500/- போலி பில் அஸ்வின் பிரிண்டர்ஸ் பெயரில் மோசடி நடந்துள்ளது. இது போல் கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள கிராமங்களிலும் ரூ5500 /- மோசடி பில் போடப்பட்டுள்ளது.

 அதே போல் கோட்டூர் உள்ளிட்ட அனைத்து பேரூராட்சிகளிலும் அஸ்வின் பிரிண்டர்ஸ் பெயரில்  35பேரூராட்சியிலும்  தலா ரூ8775/- என போலி பில் மோசடி நடந்துள்ளது.

  இந்த போலி மோசடி பில்கள்2017 ஏப்ரல்  மாதம் முதல் 2018 மார்ச் வரை  மாதம் வரை மாதா,மாதம் போடப்பட்டுள்ளது…

 கோயம்புத்தூர் மாவட்டத்தில் மட்டும் ஊராட்சிகள், பேரூராட்சிகளில் போடப்பட்ட மோசடி பில் மதிப்பு சுமார் ரூ2கோடியை தாண்டும்..

  அஸ்வின் பிரிண்டர்ஸ் கொடுக்கும் பில்லை ஏற்றுக்கொண்டு, காசோலை தரும்படி உள்ளூர் அமைச்சர் அலுவலகம் பி.டி.ஒக்களுக்கும், பேரூராட்சி தனி அலுவலருக்கும் செல்போன் உத்தரவு போடப்படுகிறது. அமைச்சர் லெட்டர் பேடில் பரிந்துரை கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது.

 பறவை காய்ச்சல் மோசடி பில் ஆதாரங்களுடன் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரகத்துக்கு புகார் அனுப்பினோம். புகாரில் உள்ள ஆதாரங்களை சரி பார்த்து, உரிய நடவடிக்கைகள் எடுக்கும்படி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநர், தமிழக அரசின் தலைமைச் செயலாளர் அவர்களுக்கு பரிந்துரை செய்துள்ளார்…

 மோசடி பில்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறதா என்று கொஞ்ச நாட்கள் பார்ப்போம்… நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நீதிமன்றத்திற்கு போவதை தவிர வேறு வழியில்லை…

 

Comments

comments