கோயம்புத்தூர் மாநகராட்சி…குறட்டைவிடும் நிர்வாகம்.. ஆர்.டி.ஐ சட்டம் குளறுபடி..

கோயம்புத்தூர் மாநகராட்சியில் அதிபுத்திசாலிகள் அதிகமாக பணியாற்றுவதால், நிர்வாகம் முடங்கி போய்விட்டது.. தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005ன் பொதுத் தகவல் அலுவலர்கள், மேல்முறையீட்டு அலுவலர்கள் குறட்டை விடுவது ஆதாரங்களுடன் அம்பலமாகிறது…

  கோயம்புத்தூர் மாநகராட்சியிலிருந்து 4.6.18ம் தேதி வீட்டு முகவரிக்கு கடிதம் வந்தது.. கடிதத்தை பார்த்தவுடன் அதிர்ச்சியடைந்தேன்..நான் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தில் கேட்காத தகவலுக்கு பதில் வந்துள்ளதே என்று கடிதத்தின் பார்வையில் பார்த்த போது, தகவல் பெறும் உரிமைச் சட்டத்தில் தகவல் கேட்டது எம்.கே.முகமது..

 கோயம்புத்தூர் புலியகுளம் மாநகராட்சி குடியிருப்புகளை சலுகை விலையில் முத்திரைத்தாள் மதிப்பிறகு கிரையம் செய்த தரக்கோரியது தொடர்பான தகவல் கேட்டுள்ளார்…

 எம்.கே.முகமதுக்கு தகவல் டைப் செய்து, பெறுநர் வி.அன்பழகன் என்று முகவரியிட்டு அனுப்பி உள்ளார்கள்.. பொதுத் தகவல் அலுவலர் மற்றும் செயற் பொறியாளர் திட்டம் இதெல்லாம் பார்க்கலாமல் உதவியாளர் நீட்டிய இடத்தில் கையெழுத்து போட்டு உள்ளார் என்றால் அவரை அதிபுத்திசாலி என்று அழைப்பதில் என்ன தவறு…

  தகவல் பெறும் உரிமைச் சட்டம் உள்ளிட்ட கோயம்புத்தூர் மாநகராட்சி நிர்வாகமும் குறட்டைவிட்டுக்கொண்டு இருக்கிறது என்பதற்கு இதைவிட வேறு என்ன ஆதாரம் வேண்டும்… 

    கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் விஜயகார்த்திகேயன் ஐ.ஏ.எஸ் என்னதான் செய்கிறார்…

 

 

 

Comments

comments