கோயம்புத்தூர் தொகுதி…சி.பி.ராதாகிருஷ்ணனின் ரூ2.12கோடி கடன் கதை…பாஜக ஆட்சியில் தொழில் வளரவில்லையா?

கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதியில் பாஜக –அதிமுக கூட்டணி வேட்பாளராக பாஜகவை சேர்ந்த சி.பி ராதாகிருஷ்ணன் போட்டியிடுகிறார்.. மிஸ்டர் கிளீன் அன்பாக அழைக்கப்படும் சி.பி.ராதாகிருஷ்ணன் பாரத ஸ்டேட் பாங்கில் ரூ2கோடி கடன் வாங்கிய கதையை கேளுங்கள்..

 SPICE TEXTI நிறுவனம் சென்னையில் பாரத ஸ்டேட் பாங்கில் 27.12.07ல் ரூ2கோடி கடன் வாங்குகிறது. திருப்பூரில் இருக்கும் நிறுவனத்துக்கு சென்னையில் கடனா என்று கேள்வி கேட்காதீர்கள்..

 SPICE TEXTI நிறுவனத்தின் கடனுக்கு, உரிமையாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் நிலம், கட்டிடங்களை செக்குரிட்டியாக கொடுக்கிறார்..21 மாதம் தவணைத் தொகையை கட்டினாராம். 21 மாதங்கள் கழித்து, உலகளவில் பொருளாதாரத்தில் ஏற்பட்ட வீழ்ச்சியால் வெளிநாடுகளில் பெறப்பட்ட ஆர்டர்கள் ரத்தாகிவிட்டதால் கடனை கட்ட முடியவில்லையாம்..

 பாரத ஸ்டேட் பாங்க் 2010ல்(O.A.no.58) ரூ2,74,83,912 கட்ட வேண்டும் என்று வழக்கு போடுகிறது. வழக்கில் 14.6.2010 வரை  வட்டியுடன் ரூ3.01கோடி SPICE TEXTI நிறுவனத்தின் உரிமையாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் செலுத்த வேண்டும் என்று 6.1.2012ல் தீர்ப்பு கொடுத்து, வழக்கு முடித்து வைக்கப்படுகிறது..

 பாஜக 2014ல் ஆட்சி அமைத்தவுடன், தன்னுடைய அதிகாரத்தை மும்பாய் வரை கொண்டு செல்கிறார். SARFAESI ACT 2002 என்று வாக்களிக்கும் ஏழை, நடுத்தர மக்களுக்கு புரியாதா சட்டங்களை வைத்து, உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து, வாதாடுகிறார்கள்..

 இதே ஏழை,நடுத்தர  மக்கள் ரூ500/- கடன் வாங்கி கட்டவில்லை என்றால் சொத்து ஜப்தி செய்வார்கள்.. விவசாய டிராக்டருக்கு கடன் கட்டவில்லை என்றால் ஜப்தி செய்தி, பல விவசாயிகள் தற்கொலை செய்துக்கொண்டு இருக்கிறார்கள்..ஆனால் பாஜக வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் வாங்கிய ரூ2கோடி கடனுக்கு செலுத்தாத பாக்கி தொகைக்கு 2009லிருந்து வழக்கு நடக்கிறது..சி.பி.ராதாகிருஷ்ணன் சொத்து ஜப்திசெய்யவில்லை…ஏன்..பாஜக ஆட்சியின் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியுள்ளார் என்பதற்கு தீர்ப்பின் நகலை படித்தால் தெரியும்.

 24.10.17ல் சென்னை உயர்நீதிமன்றம் பாரத ஸ்டேட் பாங்கியின் சிங்கள் செட்டில் மெண்ட்டின் படி ரூ2.12 கோடி(ரூ2,12,13,755) செலுத்த வேண்டும் என்று சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு உத்தரவிட்டு வழக்கை தள்ளுபடி செய்கிறது..

 ஆனால் 15 மாதங்களாகிறது, கடன் தொகை ரூ2.12கோடியை திருப்பி செலுத்தவில்லை என்று தெரிகிறது.. மக்களவைத் தேர்தல் வேட்பு மனுவில் பக்கம் எண்.33ல் வங்கி கடன் என்ற காலத்தில் ரூ2,36,86,000/- என குறிப்பிட்டுள்ளார்..

 சி.பி.ராதாகிருஷ்ணன் ரூ2.12கோடி செலுத்திய ஆதாரங்களை வெளியிட்டால் நன்றாக இருக்கும்.

 2014ல் பாஜக ஆட்சி அமைந்த பிறகும் சி.பி.ராதாகிருஷ்ணனால் SPICE TEXTI நிறுவனத்தை நடத்த முடியவில்லை. பாஜக ஆட்சியில் திருப்பூரில் பின்னலாடை தொழில் நடத்த முடியவில்லை என்பதை சி.பி.ராதாகிருஷ்ணன் ஒத்துக்கொள்கிறார் என்பதுதான் உண்மை..

 பாரத ஸ்டேட் பாங்கில் வாங்கிய கடனை செலுத்தாத சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு கோவை மக்களவைத் தொகுதியில் தாமரை சின்னத்தில் வாக்கு அளித்தால் என்னவாகும்.. கோயம்புத்தூர் மக்கள் கதி அதோ கதிதான்..

            சிந்தித்து பாருங்கள்.. வாக்காளர்களே..

Comments

comments