கே.பி.முனுசாமியின் தெரு விளக்கு ஊழல்…ஏமாற்றப்பட்ட முதல்வர் ஜெயலலிதா..ஊழல் -5

உள்ளாட்சித்துறை அமைச்சராக கே.பி.முனுசாமி இருந்த போது, உதவியாளரும், சொத்து குவிப்பு வழக்கின் விசாரணை அதிகாரி நல்லம்மா நாயுடுவின்  நெருங்கிய உறவினருமான சேகர் மூலம் நகராட்சி பகுதிகளில் தெரு விளக்கு அமைக்க, உதிரி பாகங்கள் கொள்முதல் செய்ததில் பல கோடி மெகா முறைகேடு நடந்தது. இதனால் அரசுக்கு ரூ3 கோடி இழப்பு ஏற்பட்டது.  இந்த முறைகேட்டில் நகராட்சி நிர்வாக ஆணையராக இருந்த சந்திரகாந்த்பி.காம்பளே ஐ.ஏ.எஸ்க்கும் தொடர்பு உண்டு.

  முதல்வராக இருந்த ஜெயலலிதாவுக்கு வந்த புகாரின் அடிப்படையில் தெரு விளக்கு அமைக்க உதிரி பாகங்கள் கொள்முதலில் நடந்த ஊழல் தொடர்பாக விசாரணை செய்ய உத்தரவிட்டார். நகராட்சி நிர்வாகத்துறை தலைமைப் பொறியாளர் வெங்கடாசலம் அனைத்து மண்டல துணை இயக்குநர்களுக்கும் கடிதம் எழுதினார்.

 இது தொடர்பான விசாரணையில் அமைச்சராக இருந்த கே.பி.முனுசாமிக்கு, உதவியாளர் சேகர் மூலம் பல கோடி முறைகேடு நடந்தது உறுதியானது.  இதனால் அரசுக்கு ரூ3கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது என்பது, விசாரணை அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருந்தது. ஆனால் கே.பி முனுசாமி உதிரி பாகங்கள் கொள்முதல் ஊழல் கோப்பை முதல்வரின் செயலாளராக இருந்த ராம்மோகன்ராவ் ஐ.ஏ.எஸ் மூலம் முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லாமல் மறைத்துவிட்டார்.

 உளவுத்துறை அதிகாரிகள் முதல்வரின் தோழி சசிகலாவிடம் கே.பி.முனுசாமியின் தெருவிளக்கு அமைக்க, உதிரிபாகங்கள் கொள்முதல் செய்ததில் ஊழல் நடந்த விவரங்களை கூறினார்கள். சசிகலா, முதல்வரின் கவனத்துக்கு கொண்டு போக, முதலில் கே.பி முனுசாமியின் உள்ளாட்சித்துறை அமைச்சர் பதவி பறிக்கப்பட்டது. பிறகு அமைச்சர் பதவியே பறிபோனது.

 இதனால் சசிகலாவுக்கு எதிராக ஒ.பன்னீர்செல்வம் அணியில் ஆவேசமாக பேட்டி கொடுத்தார்..

 ஒ.பன்னீர்செல்வம் அணியில் பரபரப்பாக, சசிகலா எதிராக செயல்பட்ட கே.பி முனுசாமி, தற்போது ஏன் மெளனமாக இருக்கிறார்… சென்னை பக்கமே காணவில்லையே?

 கே.பி முனுசாமி மீது நம்ம டாய்லட் ஊழல், நகராட்சி நிர்வாக அலுவலகம் கட்டுமான பணியில் ஊழல் உள்ளிட்ட சில ஊழல்கள் தொடர்பான கோப்புகளை  விஜிலென்ஸ் விசாரணைக்கு, முதல்வர் அலுவலகம் அனுப்பி வைக்க, முனுசாமி மெளனமாகிவிட்டார்..

     இதோ..ஆதாரம்.. கே.பி.முனுசாமி பதில் சொல்லுவாரா…                       … தொடரும்….

  

 

Comments

comments