கூவம் ஆக்ரமிப்பு பின்னணியில் நடிகர் ரஜினிகாந்த்..ஏ.சி. சண்முகத்தின் மாஸ்டர் பிளான்…

சென்னை அருகே மதுரவாயலில் செயல்படும் டாக்டர் எம்.ஜி.ஆர் நிகர் நிலைப் பல்கலைக்கழகத்தில்  2015 டிசம்பரில் பெய்த கடும் மழையில் கல்லூரியின் கட்டிடம், விடுதி இரண்டாம் தளம் வரை நீர் புகுந்தது. சுமார் 400 மாணவ, மாணவிகள் சிக்கி தவித்தார்கள். படகு மூலம் 48 மணி நேரம் கழித்து காப்பாற்றப்பட்டார்கள்.. திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்ததில், கூவம் ஆறு முழுவதும் ஆக்ரமிக்கப்பட்டு, அதன் மீது கல்லூரியின் விடுதிகள், கட்டிடங்கள் கட்டப்பட்டு இருந்தது. விடுதி, கல்லூரி கட்டிடங்களை இடிக்க, முதல்வராக இருந்த ஜெயலலிதா உத்தரவிட்டார்.

அப்போது திருவள்ளூர் மாவட்ட ஆட்சித் தலைவராக இருந்த பங்கஜ் குமார் பன்சாலா ஐ.ஏ.எஸ், ஆர்.டி.ஒ லதா இருவரையும் ஏ.சி. சண்முகம் மிரட்டினார்.. ஆனால் இருவரும் மனசாட்சிப்படி நடவடிக்கை எடுத்தார்கள்..

டாக்டர் எம்.ஜி.ஆர் நிகர் நிலைப் பல்கலைக்கழகத்தின் நிர்வாக இயக்குநர் ஏ.சி.சண்முகம், முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்க முயற்சி செய்தார். ஆனால் ஜெயலலிதா சந்திக்க முடியவில்லை கூவம் ஆக்ரமிப்புகள் இடித்து தள்ளப்பட்டது..

2013லிருந்து மீண்டும் கூவத்தை ஆக்ரமிக்க தொடங்கினார் ஏ.சி.சண்முகம். முதல்வர் ஜெயலலிதா வருவாய்த்துறை மூலம் ஆய்வு செய்ய உத்தரவிட்டார்.. அதனால் ஆக்ரமிப்பு பணி நின்று போனது.

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு உள்ளாட்சித்துறை, வருவாய்த்துறை அதிகாரிகளிடன் ஒத்துழைப்புடன் மீண்டும் கூவத்தை ஆக்ரமித்து, கட்டிடங்களை கட்டி வருகிறார். இதற்கு எதிர்ப்பு வர, 5.3.18ல் ஏ.சி. சண்முகத்தின் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்ட  எம்.ஜி.ஆர் சிலையை, ஆன்மீக அரசியல் கட்சித் தலைவர் நடிகர் ரஜினிகாந்த் மூலம் திறந்து தன்னை ஒண்ணும் செய்ய முடியாது என்று நிருபித்து உள்ளார்…

ஆனால் 5.3.18 மதியம் 2மணி முதல் இரவு 8மணி வரை பூந்தமல்லி நெஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்தது..

கூவத்தை ஆக்ரமிக்க, ஏ.சி சண்முகம், நடிகர் ரஜினிகாந்தை பயன்படுத்திக்கொண்டார் என்பதுதான் உண்மை…

இது தெரியாமல் ரஜினிகாந்த், எம்.ஜிஆர் தந்த நல்லாட்சியை தருவாராம்…

எம்.ஜி.ஆர் கூவத்தை ஆக்ரமிக்க சொன்னாரா…

 

Comments

comments