கூலித் தொழிலாளர்கள் பெயரில் கோடிக் கணக்கில் வங்கி கடன்.. மோசடி பின்னணியில் வங்கி மேலாளர் *ராமநாரயணன்…

.தேனி மாவட்ட தென்கரை பாரத ஸ்டேட் வங்கியில் பல கோடி மோசடி வழக்கின் முக்கிய குற்றவாளி விருதுநகர் பருப்பு ஆலை உரிமையாளர் OMS.வேல்முருகன். அவர் தனது ஆலையில் சுமைதூக்கும் தொழிலாளர்கள் *வெயில்முத்து, காளியப்பன், மாரியப்பன், தங்கமாரி, காளிதாஸ்* மற்றும் *கணேசன்* ஆகியோரிடம் உங்கள் அனைவருக்கும் காப்பீடு வாங்கி தருகிறேன் என்று கூறி, தனது அக்கா மகன் செண்பகன் அவரின் மகள் இந்துமதி ஆகியோருடன் சேர்ந்து பெரியகுளம் தென்கரையில் உள்ள பாரத ஸ்டேட் வங்கிக்கு அழைத்து சென்று வெயில்முத்துவிடம் பல பத்திரங்களில் கையெழுத்துப் பெற்றுக்கொண்டும் மற்றவர்களை சாட்சிகளாக இணைத்து வங்கி மேலாளர் *ராமநாரயணன்* மற்றும் பீல்டு ஆபீசர் *தீபா* இருவர் உதவியுடன் இதுபோல் மேலும் 100-நபர்களின் பெயரில் மோசடி செய்தும் வங்கியில் பணம் பெற்று உள்ளார்கள். இந்த பணம் தனது வங்கி கணக்கில் வந்தது கூட தெரியாத அப்பாவி தொழிலாளர்களை ஏமாற்றியதற்கு உடந்தையாக இருந்தது வங்கி மேலாளர்…!

 வழக்கை திசை திருப்ப கடன் வழங்கிய வங்கி மேலாளர் ராமநாராயணன் மற்றும் வங்கி பீல்டு ஆபீசர் தீபா இரண்டு பேரையும் கைது செய்யாமல் இருக்க காவல்துறை தனிப்படை உயர் அதிகாரிகளுக்கு பல லட்சங்கள் வழங்கப்பட்டது என்று கைதாகி சிறையில் இருக்கும் வேல்முருகன் உறவினர்கள் புலம்புகிறார்கள்.
ஆனால் இந்த வழக்கின் விசாரணை அதிகாரியான தென்கரை காவல் ஆய்வாளர் *மதனகலா* அவர்களுக்கு பல லட்சம் கைமாறியதாகவும் அது அமெரிக்காவில் உள்ள அவரது கணவர் பெயரில் வழங்கி உள்ளதாக தெரிகிறது..!! மதனகலா கணவரின் அனைத்து வங்கி கணக்குகளை உடனடியாக முடக்க வேண்டும் என்று சிபிஐக்கு கடிதங்கள் குவிந்துள்ளது.
கூலித் தொழிலாளர்கள் பெயரில் வங்கியில் கடன் வாங்கி மோசடி நடந்தது தொடர்பாக பல கட்ட  விசாரணை நடந்தது. ஆனால்  வங்கி அதிகாரிகளான தேனி மாவட்ட DGM மற்றும் கிளை மேலாளர் ராமநாரயணன், தீபா ஆகிய மூவரையும் வழக்கில் ஏன்  சேர்க்கவில்லை.  கடன் வழங்கிய வங்கி அதிகாரிகளை காப்பாற்றும் முயற்சியிலும், வழக்கை திசை திருப்ப  வேல்முருகனுக்கு ஆதரவாக அவரது சமுகத்தை சார்ந்த ச.ம.கட்சி தலைவர் ஒருவர் பல கோடி பெற்று தர்மயுத்த நாயகனிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார் என தெரிகிறது. ஆகவே இந்த வழக்கை உடனடியாக சி.பி.ஐ வசம் ஒப்படைக்க வேண்டும் என்று DSP அறுமுகம், ஆய்வாளர் மதனகலா, மற்றும் உண்மையான குற்றவாளிகளான வங்கி அதிகாரிகளை விசாரித்தால் பல உண்மைகள் வெளிவரும்…!!!
மக்கள் செய்தி மையம் மத்திய அமலாக்கத்துறைக்கும் மற்றும் சி.பி.ஐ க்கும் புகார் அனுப்பி உள்ளது.

Comments

comments