கூடுதல் இயக்குநர் செபாஸ்டின் சஸ்பெண்ட் … வருமானத்துக்கு அதிகமாக ரூ100 கோடிக்கு சொத்து…

நகராட்சி நிர்வாகத்தின் கூடுதல் இயக்குநராக,  கடந்த ஐந்தாண்டுகளமாக ஊழல் ராஜாவாக வலம் வந்த செபாஸ்டின் 31.5.18ம் தேதி ஒய்வு பெற வேண்டிய நிலையில் 29.5.18 அன்று சஸ்பெண்ட் செய்யப்பட்டார்..

  கடந்த ஐந்தாண்டுகளமாக  நகராட்சி நிர்வாகத்தின் கூடுதல் இயக்குநர் பதவியை முறைகேடாக பயன்படுத்தி ரூ100 கோடிக்கு சொத்து சேர்த்திருப்பதை, ஆதாரங்களுடன் மக்கள்செய்திமையம்  ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரத்துக்கு புகார் கொடுத்தது. மேலும் சிபிஐ அதிகாரிகளால் செய்யப்பட்ட  மத்திய தணிக்கைத்துறை அதிகாரி அருண்குமார் கோயலுடன் கூட்டணி அமைத்து, நகராட்சி நிர்வாகத்துறையில் பல ஊழல் கோப்புகளை மூடியது தொடபாக சிபிஐயில் மக்கள்செய்திமையம் ஆதாரங்களுடன் புகார் கொடுத்தது..

 இந் நிலையில் கூடுதல் இயக்குநர் செபாஸ்டின், சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். செபாஸ்டின் மதுரை மாநகராட்சி ஆணையராக பணியாற்றிய போது, கட்டுமான மற்றும் ரியல் எஸ்டேட் நிறுவனங்களிடமிருந்து வசூலிக்க வேண்டிய வளர்ச்சி நிதி ரூ9 கோடியை வசூல் செய்யாமல், கட்டுமான மற்றும் ரியல் எஸ்டேட் நிறுவனங்களுக்கு சாதகமாக செயல்பட்டதால் அரசுக்கு ரூ9 கோடி இழப்பு. இந்த குற்றச்சாட்டின் கீழ் செபாஸ்டின் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.. மேலும் செபாஸ்டின் மீது கிரிமினல் வழக்கு மற்றும் வருமானத்துக்கு அதிகமாக ரூ100 கோடிக்கு சொத்து சேர்த்தது உள்ளிட்ட பல வழக்குகளை பதிவு செய்வது தொடர்பாக தலைமைச் செயலாளர் மற்றும் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநர் ஆலோசனை செய்து வருகிறார்கள்…

 சஸ்பெண்ட் செய்யப்பட்ட செபாஸ்டினின்  ஊழலில் கூட்டணி அமைத்து பல கோடி சொத்துக்கள் சேர்த்த ஆவடி, திருவேற்காடு, தாம்பரம், பல்லவரம், பூந்தமல்லி, மறைமலை நகர், பம்மல்  உள்ளிட்ட பல நகராட்சிகளின் ஆணையர்கள், நகரமைப்பு ஆய்வாளர்கள், சுகாதாரப்பிரிவு ஆய்வாளர்கள்  உள்ளிட்ட பல அதிகாரிகளை,  ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரகம் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்துள்ளது…

 

 

Comments

comments