குமாரசாமியுடன் சிக்கிய- சுதாதேவி ஐ.ஏ.எஸ் பின்னணி..சிக்கும் மாஜி மத்திய அமைச்சர் காந்திசெல்வன்

    சிக்கிய ஏழு ஐ.ஏ.எஸ் அதிகாரிகள்

தமிழக அரசுக்கு சத்துணவில் முட்டை, குழந்தைகளுக்கு சத்து மாவு சப்ளை செய்யும், கிறிஷ்டி புட்ஸ் நிறுவனங்களில் மூன்றாவது நாளாக வருமான வரித்துறை ரெய்டு நடந்து வருகிறது. குமாரசாமி பெங்களுரில் வருமான வரித்துறையின் விசாரணை வளையத்தில் உள்ளார்.

வருமான வரித்துறை ரெய்டில் தமிழ்நாடு நுகர்பொருள்வாணிபக் கழகத்தின் நிர்வாக இயக்குநர் சுதாதேவி ஐ.ஏ.எஸ் வீட்டிலும் இரண்டு நாட்கள் ரெய்டு நடந்தது..

சுதாதேவி சொந்த ஊர் திருச்செங்கோடு, கிறிஷ்டி புட்ஸ் குமாரசாமி, திமுக முன்னாள் மத்திய அமைச்சர் காந்திசெல்வன் மற்றும் அதிமுக அமைச்சர்களுக்கு நெருங்கி உறவினர்.. இமாசல பிரதேசத்தின் ஐ.ஏ.எஸ் அதிகாரியான சுதாதேவி, குலு மணாலி மாவட்ட ஆட்சித் தலைவராக இருந்த போது, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குடும்பம், குலு மணாலி சென்ற போது, அனைத்து ஏற்பாடுகளும் செய்து கொடுத்தார். அதனால் மு.க.ஸ்டாலின் குடும்பத்துடன் நெருக்கமானார்..

மு.க.ஸ்டாலின் குடும்பத்தினரின் பரிந்துரையில் மத்திய அமைச்சராக இருந்த காந்திசெல்வனின் தனிச் செயலாளராக சுதாதேவி ஐ.ஏ.எஸ் நியமிக்கப்பட்டார். காந்திசெல்வன் அமைச்சராக இருந்த வரை, அதிகாரமையத்தில் வலம் வந்தார்.

தற்போது முதல்வரின் செயலாளர் -2ல் இருக்கும் விஜயகுமார் ஐ.ஏ.எஸ்,  திமுக ஆட்சியில் சுகாதாரத்துறையின் கூடுதல் செயலாளராக பணியாற்றி போது, காந்திசெல்வனின் தனிச் செயலாளராக இருந்த சுதாதேவி ஐ.ஏ.எஸ் இருவரும் கூட்டணி அமைத்து, சுகாதாரத்துறை ஆட்டிப்படைத்தார்கள்..

திமுக முன்னாள் மத்தியமைச்சர் காந்திசெல்வனும் வருமான வரித்துறை கண்காணிப்பில் சிக்கியுள்ளார்..

எடப்பாடி பழனிசாமி முதல்வராக பதவியேற்றதும் முதல் கிறிஸ்டி புட்ஸ் குமாரசாமி கண் இசைவுக்காக  300 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளும் காத்திருந்தார்கள்.. சுதாதேவி ஐ.ஏ.எஸ் இமாசல பிரதேசத்திலிருந்து தமிழக அரசு பணிக்கு மூன்று ஆண்டுகள் அயல்பணியில் மாற்றம் செய்து 23.6.17ல் மத்திய அரசு உத்தரவிட்டது. 29.6.17ம் தேதி இமாசல பிரதேச பணியிலிருந்து விடுவிக்கப்பட்டு, தமிழக அரசின் சமூக பாதுகாப்புத்துறை இயக்குநராக 7.7.17 நியமிக்கப்பட்டார்.

அடுத்த சில வாரங்களில் நுகர்பொருள் வாணிப கழகத்தின் நிர்வாக இயக்குநராக நியமிக்கப்பட்டார். அயல்பணியில் வரும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கு, டம்மியான துறையே வழங்கப்படும். ஆனால் அயல்பணியில் வந்த இரண்டு மாதத்தில் நுகர்பொருள்வாணிப கழகத்தின் நிர்வாக இயக்குநராக நியமிக்கப்பட்டதே விதிமீறல்..

நுகர்பொருள் வாணிப கழகத்தின் நிர்வாக இயக்குநராக சுதாதேவி ஐ.ஏ.எஸ் பதவியேற்றவுடன் ரேசன் கடைகளுக்கு சப்ளை செய்யப்படும் பருப்பு, பாமாயில் இரண்டுமே கிறிஷ்டி புட்ஸ் குமாரசாமியே லெட்டர் பேடு நிறுவனங்கள் மூலம் சப்ளை செய்தார்.  கிறிஷ்டி புட்ஸ் குமாரசாமியே ரேசன் கடைகளில் துவரம் பருப்பு சப்ளையா, உளுத்தம் பருப்பு சப்ளையா என்பதை முடிவு செய்வார். சமீபத்தில் கிறிஸ்டி புட்ஸ் குமாரசாமி, பினாமி நிறுவனங்களின் பெயரில் பாமாயில் ஒரு லிட்டர் பாக்கெட்,  ஒரு கோடி பாக்கெட் சப்ளை செய்ததில் மெகா முறைகேடு நடந்துள்ளது. இதில்தான் வருமானவரித்துறையில் சிக்கினார் குமாரசாமி..

வருமான வரித்துறை அதிகாரிகளின் கண்காணிப்பு  வளையத்தில் இரண்டு அமைச்சர்கள், ஒரு முன்னாள் அமைச்சர், ஏழு ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் சிக்கியுள்ளார்..

 

 

 

 

Comments

comments