குட்கா மாமூல் ஊழல் வழக்கு – மாதவராவ் கைது- விஜயபாஸ்கர் புரோக்கர்கள் சிபிஐ பிடியில்

 

குட்கா மாமூல் ஊழல் வழக்கில், சிபிஐ நடத்திய ரெய்டை தொடர்ந்து மாதவராவ், உமாசங்கர் குப்தா, வெங்கட சீனிவாசராவ், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி டாக்டர்செந்தில்முருகன், மத்திய கலால் துறை அதிகாரி பாண்டியன் ஆகிய ஐந்து பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்கள்..

 சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் புரோக்கர்கள் ராகேஷ், நந்தகுமார் இருவரையும் சிபிஐ வளையத்துக்குள் கொண்டு வந்து விசாரணை நடத்தி வருகிறார்.. ராகேஷ், நந்தகுமார் இருவரும் திருவல்லிக்கேணியில் மேன்சனில் அறை எடுத்து தங்கி உள்ளார்கள்..அந்த அறையில்தான் அமைச்சர் விஜயபாஸ்கரின் அனைத்து பண பரிமாற்றம் விவகாரங்களும் நடந்தது/நடந்து வருகிறது.

 உச்ச நீதிமன்றத்தில் குட்கா வழக்கு, சிபிஐக்கு மாற்றப்பட்டதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த உணவு பாதுகாப்பு ஆய்வாளர் சிவக்குமாரும் சிபிஐ பிடியில் உள்ளார்..சிவக்குமார் வாக்குமூலத்தின் பேரில் அமைச்சர் விஜயபாஸ்கர் கைது செய்யப்படலாம் என்று தெரிகிறது..

 மாதவ்ராவ் மாமூல் கொடுத்த டைரியில் சிக்கியுள்ள காவல்துறை சேர்ந்தவர்கள் உள்ளிட்ட பலர் ஒரு சில நாட்களில் கைது செய்யப்படுவார்கள் என்று சிபிஐ வட்டாரத்தில் கூறப்படுகிறது..

 அமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி டி.கே ராஜேந்திரன் ஐ.பி.எஸ், முன்னாள் சென்னை மாநகர காவல்துறை ஆணையர் ஜார்ஜ் ஐ.பி.எஸ்(ஒய்வு) மூவரையும் கைது செய்வது தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் ஆலோசனை செய்து வருகிறார்கள்..

  சிபிஐ அதிரடி நடவடிக்கைகளால் முதல்வர் உள்ளிட்ட அமைச்சர்கள் என்ன செய்வது என்று புரியாமல் தவிக்கிறார்கள்.. மூத்த ஐ.ஏ.எஸ் கோப்புகளில் கையெழுத்து போடுவதில்லை. இதனால் அரசு முடங்கி போகும் நிலை ஏற்பட்டுள்ளது..

 

Comments

comments