குட்கா புகழ் ஜார்ஜ் ஐ.பி.எஸ்[ஒய்வு] – கோமான் நகர் பண்ணை வீடு..

குட்கா, பான்பராக் புகழ் முன்னாள் சென்னை மாநகர காவல்துறை ஆணையர் ஜார்ஜ் ஐ.பி.எஸ்[ஒய்வு] திருப்போரூர் சட்டமன்ற தொகுதியில் தையூர் ஊராட்சியில் கோமான் நகரில் சுமார் 8 ஏக்கரில் அதி நவீன பண்ணை வீடு கட்டியுள்ளார். ஆனால் இன்னும் கட்டுமான பணி முழுமையாக முடியவில்லை..  பண்ணை வீட்டின் கட்டுமான பணிக்கு தினமும் 40-50 தொழிலாளர் பணிக்கு வந்து செல்லுகிறார்கள்..கோமான் நகருக்கும், பண்ணை வீட்டிற்கு ஒரு கிலோ மீட்டர் வரையிலான சாலை செம்மண்ணில் போடப்பட்டுள்ளது…

    சிறுதாவூர் பண்ணை பங்களாவைவிட பல மடங்கு பெரிது…   குட்கா தொடர்பாக 5/2017ல் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. சிபிஐ விசாரணை தொடர்பான வழக்கின் தீர்ப்பு உயர்நீதிமன்றத்தில் எப்போது வேண்டுமானாலும் வெளியாகலாம்.

ஆனால் சென்னை மாநகர காவல்துறை ஆணையராக இருந்த ஜார்ஜ் ஐ.பி.எஸ், பல நேரங்களில் பத்திரிகையாளர்களிடம் விரோதபோக்கை கடைபிடித்தார் என்பது வருத்தமே…

      குட்கா, பான்பராக் கமிசனில் பண்ணை வீடு கட்டப்பட்டு இருக்குமோ…சத்தியமாக தெரியாதுங்க.. சார்…

நீ இன்னும் குண்டர் சட்டத்தில் கைது செய்து, 119 நாள் சிறையில் இருந்தும், உனக்கு ஜால்ரா போடு புத்தி வரவில்லை என்று நண்பர்கள் திட்டுவது கேட்கிறது… என்ன செய்வது…

Comments

comments