கீழக்கரை நகராட்சி … குடி நீர் பைப் ஊழல்- தொடரும் பஞ்சாய்த்து…

உள்ளாட்சி அமைப்புகள்  கடந்த ஆறு ஆண்டுகளாக  ஊழலில் முழ்கிவிட்டது. இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சியில் குடி நீர் திட்டத்துக்கு பைப் கொள்முதல் செய்ததில் மெகா முறைகேடு நடந்துள்ளது. அதாவது தரமில்லாத, விலை குறைவான பைப் கொள்முதல் செய்து, அதற்கு அதிக விலை நிர்ணயித்து, பணம் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது. இதில் பல லட்சம் அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.

  இந்த மெகா முறைகேட்டை, மத்திய தணிக்கைத்துறை கண்டுபிடித்து நகராட்சி நிர்வாகத்துறை செயலாளருக்கு ஜூலை 2016ல் கடிதம் அனுப்புகிறது.  மத்திய தணிக்கைத்துறையின் கடிதத்தை 5.7.16ல் துணைச் செயலாளர்,  நகராட்சி நிர்வாகத்துறை ஆணையர் பிரகாஷ் ஐ.ஏ.எஸ்க்கு விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பி வைக்கிறார்.

இந்த கடிதம் நகராட்சி நிர்வாகத்துறை ஆணையர் அலுவலகம் வந்தவுடன், பஞ்சாய்த்து தொடங்கியது. நகராட்சி நிர்வாகத்தின் கூடுதல் இயக்குநர் செபாஸ்டின், கீழக்கரை நகராட்சி ஆணையர் மற்றும் அதிகாரிகளை அழைத்து ஆய்வுக் கூட்டம் நடத்தினார்.. 

 பைப் கொள்முதல் ஊழல் கோப்பை, நான் தணிக்கைத்துறையில் பார்த்துக்கொள்கிறேன்,என்று பேரம் பேசினார்.  வழக்கம் போல் பண பரிமாற்றம் நடக்கிறது.

 மக்கள்செய்திமையத்துக்கும் தகவல் தெரியவர, தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005ன்படி தணிக்கைத்துறை அறிக்கையை கேட்ட போது, தணிக்கைத்துறை அறிக்கை இன்னும் அரசு சட்டமன்றத்தில் வைக்கவில்லை,  அதனால் நாங்கள் நகல் அளிக்க முடியாது என்று நகராட்சி நிர்வாகத்துறை செயலாளர் அலுவலகம் கூறியது..

 தணிக்கைத்துறையில் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தில், நீண்ட கடித போக்குவரத்துக்கு பிறகு அறிக்கை நகல் கிடைத்தது.  தணிக்கைத்துறை அறிக்கையின் அடிப்படையில் வழக்கு போட முடிவு செய்துள்ள காரணத்தால், அதை வெளியிட முடியவில்லை. 

 நகராட்சி நிர்வாகத்துறை ஆணையரகம் கீழக்கரை பைப் ஊழல் தொடர்பாக, சில விளக்கங்களை தணிக்கைத்துறை அனுப்பி உள்ளது.

ஆனால் பைப் கொள்முதல் முறைகேடு தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்காமல் வழக்கம் போல் பஞ்சாய்த்து நடந்துக் கொண்டு இருக்கிறது..

Comments

comments