கிறிஸ்டி புட்ஸ் – குமாரசாமி வாக்குமூலம்-சிக்கும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள்..

கிறிஸ்டி புட்ஸ் குமாரசாமியின் வீடு, அலுவலகங்கள் மற்றும் நுகர்பொருள்வாணிப கழகத்தின் நிர்வாக இயக்குநர் சுதாதேவி ஐ.ஏ.எஸ் வீடு ஆகிய இடங்களில் வருமான வரித்துறை ரெய்டில் ரூ17 கோடி பணம், தங்கம் மற்றும் கணக்கிட முடியாத அளவிற்கு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. ரூ1000 கோடிக்கு வரி ஏய்ப்பு நடத்தியுள்ளது உறுதியாகி உள்ளதாக வருமான வரித்துறை தரப்பில் கூறப்படுகிறது.

 குமாரசாமியை பெங்களூரில் ரகசிய இடத்தில்  வைத்து வருமான வரித்துறை மற்றும் அமுலாக்கப்பிரிவு அதிகாரிகள்  நடத்திய விசாரணையில் தமிழகத்தில் முட்டை கொள்முதலில் கோடிக்கணக்கில் கமிசன் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள், அமைச்சர்களின் பட்டியலை கூறியுள்ளதாக தெரிகிறது. நுகர்பொருள் வாணிப கழகத்தில் பருப்பு, சர்க்கரை, பாமாயில் கொள்முதலில் கொடுத்த கமிசனையும் குமாரசாமி உளறி கொட்டியுள்ளராம்…

 குமாரசாமி வாக்குமூலத்தின் பேரில் சிக்கும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பட்டியல்…

  1. வே.மு.சேவியர் கிறிசோ நாயகம் ஐ.ஏ.எஸ்(ஜூலை 2016ல் ஒய்வு)
  2. அமுதவள்ளி ஐ.ஏ.எஸ்.
  3. ஜோதி நிர்மலா ஐ.ஏ.எஸ்,
  4. மணிவாசன் ஐ.ஏ.எஸ்
  5. சிவசங்கரன் ஐ.ஏ.எஸ்,
  6. கண்ணன் ஐ.ஏ.எஸ்
  7. அசோக் டோங்ரே ஐ.ஏ.எஸ்

நுகர்பொருள்வாணிப கழகம்…

  1. சுதாதேவி ஐ.ஏ.எஸ்
  2. முனியாண்டி விஜிலென்ஸ் அதிகாரி
  3. மாசிலாமணி தலைமை கணக்கு அதிகாரி.

இரண்டு அமைச்சர்கள், ஒரு முன்னாள் அமைச்சர் பெயரை குமாரசாமி கூறியுள்ளதாக தெரிகிறது.

தமிழக அரசின் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரகம் மக்கள்செய்திமையத்தின் புகாரில் குமாரசாமியுடன் ஊழல் கூட்டணி அமைத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகள்,அமைச்சர்கள் மீது வழக்கு பதிவு செய்ய விரும்பவில்லை என்று தெரிகிறது..

 

 

 

Comments

comments