கிறிஸ்டி புட்ஸ் குமாரசாமிக்கு-தூத்துக்குடியில் 240 ஏக்கர் நிலம்..முட்டை டெண்டர் நீட்டிப்பு

கிறிஸ்டி புட்ஸ் குமாரசாமி ரூ1350 கோடிக்கு வரி ஏய்ப்பு செய்துள்ளதாக, வருமான வரித்துறை அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.  ஆனால் குமாரசாமி தன் பினாமி பெயர்களை  வருமான வரித்துறை அதிகாரிகளிடம் வாயை திறக்கவில்லையாம்..

    கிறிஸ்டி புட்ஸ் குமாரசாமியின் மேலாளர் திருச்செங்கோட்டிலிருந்து இரவு 7.30மணியளவில் 11.7.18ம் தேதி முட்டை டெண்டர் தொடர்பாக ஐ.சி.டி.எஸ் திட்ட இயக்குநர் கண்ணன் ஐ.ஏ.எஸ், செயலாளர் மணிவாசன் ஐ.ஏ.எஸ் உள்ளிட்ட சிலரிடம் பேசினார்…மூன்று அமைச்சர்கள் குமாரசாமியை காப்பாற்றும் முயற்சியில் ஈடுப்பட்டுள்ளார்கள்..

  தூத்துக்குடி மாவட்டம் குளத்தூர் வடக்கில் 140/3, 141/6A, 26/6 உள்ளிட்ட பல  சர்வே எண்களில் 100 ஏக்கர் மற்றும் குளத்தூர் தெற்கில் 108/7.11/1,11/4/11/3,199/13 உள்ளிட்ட பல சர்வே எண்களில் 140 ஏக்கர் நிலம் விளாத்திக்குளம் சார் பதிவாளர் அலுவலகத்தில் 18 பினாமி பெயர்களில் பதிவு செய்துள்ளார்.. பதிவு செய்யப்பட்ட 240 ஏக்கரில் 27ஏக்கர் அடுத்தவர் நிலம், அரசு புறம்போக்கு நிலம், பூமி தானம் நிலங்கள் போலியான பத்திரம் மூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒரு ஏக்கருக்கு பதிவு செலவு உள்ளிட்ட அனைத்து செலவுகளும் சேர்த்து ரூ2 இலட்சம்..240 ஏக்கருக்கு ரூ480 இலட்சம் முதலீடு செய்யப்பட்டுள்ளது. இதை தவிர குளத்தூரில்  400 ஏக்கருக்கு விற்பனை ஒப்பந்தம் பத்திரம் போடப்பட்டுள்ளது..

 நாங்குனேரியில் 600 ஏக்கர் நிலம் பேசி முடிக்கப்பட்டு விற்பனை ஒப்பந்த பத்திரம் போடப்பட்டுள்ளது. கமுதியில் 1000 ஏக்கர் நிலம் நிலம் பேசி முடிக்கப்பட்டு, விற்பனை ஒப்பந்த பத்திரம் போடப்பட்டு, பத்திர பதிவும் நடந்து வருகிறது.

 வருமான வரித்துறை அதிகாரிகள் நான்கு நாட்கள் குமாரசாமியிடம் பெங்களூரில் இரவு பகலாக விசாரணை நடத்தினார்கள். ஆனால் தூத்துக்குடி கொளத்தூர், நாங்குனேரி, கமுதியில் பினாமி பெயரில்  வாங்கி நிலம் தொடர்பாக வாயை திறக்கவில்லை…

 கிறிஸ்டி புட்ஸ் குமாரசாமியின் விசுவாசம் மிக்க  மேலாளர்கள் மற்றும் ஊழியர்கள் வருமான வரித்துறையால்  குமாரசாமியின் பினாமி யார் என்று கண்டுபிடிக்க முடியாது என்று வெளிப்படையாகவே பேசி வருகிறார்கள்..

 11.7.18ம் தேதி இரவு சத்துணவு மையங்களுக்கு முட்டை சப்ளை செய்யும் டெண்டர் குமாரசாமியின் பினாமி நிறுவனங்களுக்கு ஆறு மாதத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது…

 மக்கள்செய்திமையம் கிறிஸ்டி புட்ஸ் குமாரசாமியின் பினாமி பெயர்களை ஒரிரு நாட்களில் வெளியிட முடிவு செய்துள்ளது…

 

Comments

comments