கிறிஸ்டி புட்ஸ் குமாரசாமியா…கொசு வலை குமாரசாமியா..

கிறிஸ்டி புட்ஸ் குமாரசாமி அலுவலகங்கள், வீடுகளில் ஐந்து நாட்கள் வருமான வரித்துறை ரெய்டு முடிந்துள்ளது. வருமான வரித்துறை விசாரணையில் குமாரசாமி அமைச்சர்கள், அதிகாரிகளுக்கு மாமூல் கொடுத்த பட்டியலை எழுத்து மூலம் கூறிவிட்டதாக தெரிகிறது..

 குமாரசாமியின் வாக்குமூலத்தால், முன்னாள், இன்னாள் அமைச்சர்கள், அதிகாரிகள் வரை அதிர்ச்சியடைந்துள்ளார்கள்..

 சமூல நலத்துறையின் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்டத்தில் உள்ள அங்கன்வாடி மையங்களில் குழந்தைகளுக்கு கொசு கடிக்காமல் இருக்க கொசு வலை கூட அண்ணன் குமாரசாமிக்குதான் டெண்டர் கொடுக்கப்பட்டுள்ளது..

  Pre school education kit வாங்க 2015-16, 2016-17 ஆகிய ஆண்டுகளில் ஒவ்வொரு ஆண்டும் ரூ15.59கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. என்ன கிட் வாங்கினார்கள் என்று கேள்வி கேட்காதீர்கள்…2015-16ல் ரூ4.05 கோடியும், 2016-17ல் ரூ6.36 கோடியும் செலவழிக்கவில்லை.  இந்த செலவழிக்காத கொசுண்டு பணத்துக்கு   North east monsoon வருவதால் கொசு வலை வாங்க வேண்டும் என்று ஐ.சி.டி.எஸ் இயக்குநர் 20.10.17 & 25.10.17ல் செயலாளர் மணிவாசன் ஐ.ஏ.எஸ்க்கு கடிதம் எழுதினார்.  செயலாளர் மணிவாசன் ஐ.ஏ.எஸ் 1.11.2017ல் கொசு வலை வாங்கலாம் முதல் கட்டமாக சேலம், ஈரோடு மாவட்டங்களில் உள்ள 4295 அங்கன்வாடி மையங்களுக்கு மட்டும் ஒரு கொசு வலை ரூ300 விலைக்குள் வாங்க அனுமதி அளித்தார்..ரூ300 விலைக்கு என்ன கொசு வலை வாங்க முடியும்…ரூ300க்கு கொள்முதல் செய்யும் கொசுவலையில் எத்தனை குழந்தைகள் பாதுகாப்பாக இருக்க முடியும்..சேலம், ஈரோடு மாவட்ட குழந்தைகள் மட்டும் கொசு கடிக்காமல் இருக்க வேண்டுமா… என்ன ஒரவஞ்சனை…

 1.11.2017ல் கடிதம் எழுதி, ஐ.சி.டி.எஸ்க்கு கடிதம் போய் சேர்ந்து, ஐ.சி.டி.எஸ் இயக்குநர் கண்ணன் ஐ.ஏ.எஸ் அந்த கடித்ததை பார்த்து, கொசு வலை கொள்முதல் செய்ய டிசம்பர் 2017ல் தான் உத்தரவிட்டார்..அப்போது North east monsoon காலமே முடிந்துவிட்டது..

 சேலம், ஈரோடு மாவட்டங்களில் 4295 அங்கன் வாடி மையங்களுக்கு கொசு வலையை, லெட்டர் பேடு நிறுவனங்கள் மூலம் கிறிஸ்டி புட்ஸ் குமாரசாமியே சப்ளை செய்தார்…அப்ப இனி கிறிஸ்டி புட்ஸ் குமாரசாமியை கொசு வலை குமாரசாமி என்று அழைக்கலாமே..

  50,144 அங்கன்வாடி மையங்களில் எப்போது கொசு வலை கொள்முதல் செய்யப்படும் என்று தெரியவில்லை..

 Pre school education kit ஏன் ஒதுக்கீடு செய்த தொகைக்கு கொள்முதல் செய்யவில்லை என்ற கேள்விக்கு ஐ.சி.டி.எஸ் இயக்குநர் கண்ணன் ஐ.ஏ.எஸ் தான் பதில் சொல்ல வேண்டும்..

 

 

Comments

comments