கிரானைட்ஸ் – தாது மணல் முறைகேடுகளில்..சிக்கிய நயினார் நாகேந்திரன்…ராமநாதபுரம் பாஜக வேட்பாளர்…

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 2001-2006 அமைச்சரவையில் தொழில்துறை அமைச்சராக நயினார் நாகேந்திரன் இருந்த போது, முறைகேடாக, விதிமுறைகளை மீறி, சட்டத்துக்கு புறம்பாக கிரானைட்ஸ், தாதுமணல் குவாரிகளுக்கு அனுமதி கொடுத்தார்.

 கிரானைட்ஸ் – தாது மணல் முறைகேடுகளுக்கு காரணமே நயினார் நாகேந்திரன் தான்.. அதிமுகவில் அதிகாரமையத்தில் வலம் வந்த நயினார் நாகேந்திரன், தன் சொத்துக்களை காப்பாற்றிக்கொள்ள பாஜகவில் ஐக்கியமானார்..

 பாஜகவின் ராமநாதபுரம் மக்களவை தொகுதியின் வேட்பாளராக நயினார் நாகேந்திரன் அறிவிக்கப்பட்டுள்ளார்.. ஆனால் கடந்த 30 நாட்களாக ராமநாதபுரம் தொகுதியில் பிரச்சாரம் செய்து வருகிறார்..

 தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி தாலுகா ஒட்டுடன்பட்டி கிராமத்தில் 1.21.5 ஹெக்டேரில் 8200 கன மீட்டர் கிரானைட்ஸ் வெட்டியெடுக்க சவுத் சோண் கிரானைட்ஸ் நிறுவனத்துக்கு 20 ஆண்டுகளுக்கு அனுமதி அளித்தார் தொழில் துறை அமைச்சராக இருந்த நயினார் நாகேந்திரன்.. நயினார் நாகேந்திரன் 8.2.06ல் கோப்பில் கையெழுத்து போடுகிறார். ஆனால் அரசாணை வெளியிடுவதில் அதிகாரிகள் சில குறிப்புகளை எழுதுகிறார்கள்.  The approved mining plan called for the applicant firm, under sub rule 13 of rule 19A of TNMMC rules 1959 இந்த குறிப்பின்படி கோப்புகள் நகர, 2006 சட்டமன்றத் தேர்தலுக்கான அறிவிப்பு மார்ச் முதல் வாரத்தில் வெளியாகிவிட்டது.

 நயினார் நாகேந்திரன் வாய்மொழி உத்தரவின் படி 28.2.06 அன்று கோப்புகளில் கையெழுத்து போட்டதாக பதிவு செய்து, அரசாணை வெளியிடப்பட்டது.

  இப்படி பல கோப்புகள் மக்கள்செய்திமையத்திடம் உள்ளது.. கிரானைட்ஸ், தாது மணலை முறைகேடுகளில் முக்கிய பங்கு வகித்த நயினார் நாகேந்திரன், பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்..

 மக்கள்செய்திமையம் நயினார் நாகேந்திரன் ஊழல்களை மினி புத்தகமாக வெளியிட உள்ளது..

 

 

 

 

 

Comments

comments