காவிரி மேலாண்மை வாரியம்…புது டில்லி சென்று வர…கோடிக்கணக்கில் கணக்கு இல்லையாம்

காவிரி நதி நீர் பிரச்சனை தொடர்பான நீதிமன்ற வழக்குகளில் துறையின் உயர்மட்ட அலுவலர்களால் பயணம் மேற்கொள்ள்ப்படுகிறது.  உயர் மட்ட அலுவலர்கள் பயணச் செலவுகளை தாங்களே நேரடியாக பெற்றுக்கொள்ள அதிகாரம் அளிக்கப்பட்டவர்கள் அதனால் பயணச் செலவு குறித்து, கணக்கு வழக்குகளை தரமாட்டார்களாம்.  அதனால் தலைமைச் செயலகத்தில் உள்ள பொதுப்பணித்துறையில் கணக்கு வழக்குகள் இல்லையாம்.

 ஆனால் பொதுப்பணித்துறையின் முதன்மை  செயலாளர் மட்டும்18.6.16 முதல் மார்ச் 2018 வரை புதுடில்லி சென்ற வந்த செலவு தொகை ரூ19.72 இலட்சம்…

  காவிரி தொழில் நுட்பக் குழுமம் மற்றும் பன் மாநில நதி நீர் பிரிவு ஒய்வு பெற்ற தலைமை பொறியாளர் இரா.சுப்ரமணியன் தலைமையில் நான்கு பேர் குழு செயல்படுகிறது. இரா.சுப்ரமணியன் தலைமையில் குழு புதுடில்லி சென்ற வந்தது எந்த செலவுகளை இது வரை சமர்பிக்கவில்லையாம்..

 இதெல்லாம் நான் சொல்லவில்லை…தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005ன்படி பெறப்பட்ட தகவல்கள்…

 காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படவில்லை. ஆனால் காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பாக அதிகாரிகள் புதுடில்லிக்கு சென்று வந்த செலவு தொகை ரூ5 கோடியை தாண்டும்..வழக்கில் ஆஜராகும் மூத்த வழக்கறிஞர்களுக்கு கொடுக்கப்படும் கட்டணம் பல கோடியாம்…

 அம்மாடியோவ்…காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க, டில்லிக்கு சென்ற வந்த அதிகாரிகளின் செலவு கணக்குகள் ஆய்வு செய்தால், பல ஊழல் கதைகள் வெளிவரும் போலிருக்கு…

 காவிரி தண்ணி வரவில்லை… ஆனால் பணம் மட்டும் கோடிக்கணக்கில் செலவு…இந்த பணத்துக்கு கணக்கு வழக்கும் கிடையாதாம்…

                                                   யார் அப்பன் வீட்டு பணம்…

 

 

Comments

comments