கார்த்திகேயன் ஐ.ஏ.எஸ் பூந்தமல்லி நகராட்சி ஆணையரா? விஜிலென்ஸ் இயக்குநரகத்தின் அவலம்..

மக்கள்செய்திமையம், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரகத்துக்கு பூந்தமல்லி நகராட்சியின் நகரமைப்பு ஆய்வாளர் தாமரைச் செல்வன் 2017ல் ஒசூர் நகராட்சி மாற்றப்பட்டார். சில நாட்களில் மாறுதலை ரத்து செய்து, பூந்தமல்லியில் பணியை தொடர்ந்தார். இந்த மாறுதலை ரத்து செய்ய கொடுத்த விலை ரூ10 இலட்சம்..

 அதே போல் தாமரைச்செல்வன் பூந்தமல்லி நகராட்சியிலிருந்து 8.3.19ல் திருப்பத்தூர் நகராட்சிக்கு மாற்றப்பட்டார். திருப்பத்தூர் மாறுதல் ஆணை ரத்து செய்யப்பட்டு, திருத்தணி நகராட்சிக்கு 16.3.19ல் மாற்றப்பட்டார். திருத்தணிக்கு மாறுதல் பெற கொடுத்த விலை ரூ15 இலட்சம்..

 இது தொடர்பாக ஊழல் தடுப்பு மற்றும் இயக்குநரகத்தில் ஆதாரங்களுடன் புகார் கொடுத்தோம்.. அந்த புகார் தலைமைச் செயலாளருக்கு மேல் நடவடிக்கைக்காக பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

 தலைமைச் செயலாளருக்கு பரிந்துரை செய்யப்பட்ட கடிதத்தில் கார்த்திகேயன் ஐ.ஏ.எஸ், நகராட்சி ஆணையர், பூந்தமல்லி நகராட்சி என்று தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

 தலைமைச் செயலாளருக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ள கடிதத்தில் கையெழுத்து போட்டுள்ள டி.எஸ்.பி ராமதாசு என்ன கடிதத்தில் டைப் செய்யப்பட்டுள்ளது என்று படித்து பார்க்கமாட்டாரா..

  கார்த்திகேயன் ஐ.ஏ.எஸ், எப்படி பூந்தமல்லி நகராட்சி ஆணையராக நியமிக்க முடியும் என்ற அடிப்படை அறிவு கூட இல்லையா..

  நகராட்சி நிர்வாக ஆணையர் கார்த்திகேயன் ஐ.ஏ.எஸ்யை, பூந்தமல்லி நகராட்சி ஆணையர் என்று தலைமைச் செயலாளருக்கு பரிந்துரை செய்துள்ள கடிதத்தை பார்க்கும் போது, ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரகத்தின் நிர்வாகம் மிகவும் கேவலமாக இருக்கிறது என்பது தெளிவாக தெரிகிறது..

  இப்படி அ,ஆ தெரியாத  காவல்துறை அதிகாரிகளை வைத்துக்கொண்டு ஊழல் புகாரை விசாரித்து, வழக்கு பதிவு செய்வார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது..

  ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநர் ஜெயந்த்முரளி ஐ.பி.எஸ் என்ன நடவடிக்கை எடுக்கிறார் என்று பார்ப்போம்…

Comments

comments