காஞ்சிபுரம் மாவட்டம்- புளு மெட்டல் குவாரி அபராதம்- ரூ232கோடி என்னாச்சு…

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர், மதுராந்தம் தாலுகா புளு மெட்டல் குவாரிகளில் விதிமுறைகளை மீறி, சட்டத்துக்கு புறம்பாக புளு மெட்டல் எடுத்த ஒப்பந்தகாரர்களுக்கு ரூ250கோடி அபராதம் விதிக்கப்பட்டது.

 இந்த  அபராதத் தொகையை எதிர்த்து, மாவட்ட ஆட்சித் தலைவரிடம் அப்பீல் செய்தார்கள்..அப்பீல் கோப்புகள் 2014 ஜனவரியிலிருந்து மாவட்ட ஆட்சித் தலைவர்கள், முடிவெடுக்க முடியாமல் தடுமாறினார்கள்..

 முதலில் அந்த பட்டியலை பார்ப்போம்..

  1. கே.பிரேமலதா – ரூ5.78இலட்சம்
  2. P.G enterprises – ரூ4.39 இலட்சம்
  3. உமாமகேஸ்வரி – ரூ3.85இலட்சம்.
  4. நாகேஸ்வரன் – ரூ83.66கோடி
  5. ஸ்ரீராம் – ரூ17.33கோடி
  6. கணேசன் – 5.92கோடி
  7. குணசேகரன் – ரூ33.42கோடி
  8. நாகேஸ்வரன் – ரூ83.77கோடி

இந்த எட்டு பேருக்கு புளு மெட்டல்  குவாரிகளில் சட்ட விரோதமாக, விதிமுறை மீறி எடுத்ததற்காக ரூ232கோடி அபராதம் விதிக்கப்பட்டது. மாவட்ட ஆட்சித் தலைவரிடம் அப்பீல் செய்து இருந்தார்கள்..

  2014லிருந்து மாவட்ட ஆட்சித் தலைவர்களிடம் முடங்கி கிடந்த அப்பீல் மனுவின் பேரில் ரூ232கோடி அபராதத் தொகையை தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டதாம்..

 இதே போல் தாம்பரம் தாலுகாவிலும் சுமார் ரூ100கோடி அபராதமும் தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டதாம்..

  அரசுக்கு கிடைக்க வேண்டிய வருவாய் ரூ332கோடி இழப்பை ஏற்படுத்திய அதிகாரிகள் மீது விஜிலென்ஸ் அதிகாரிகள் விசாரணை நடத்துவார்களா….

           

 

Comments

comments