காஞ்சிபுரம் மாவட்டம்- புளு மெட்டல் குவாரி அபராதம்-ரூ230கோடி தள்ளுபடி பின்னணி

காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு, ஆலந்தூர் தாலுகாவில் உள்ள புளு மெட்டல் குவாரிகளில் விதிமீறல் மற்றும் சட்டத்துக்கு புறம்பாக புளு மெட்டல் எடுத்ததாக செங்கல்பட்டு, தாம்பரம் ஆர்.டி.ஒ அபராதம் விதித்த பட்டியலை பாருங்கள்..

  1. சிம்சுமரா பூபதி, அஸ்தினாபுரம் – ரூ27.18 இலட்சம்
  2. எஸ்.ராமசாமி , மடிப்பாகம் – ரூ34.34இலட்சம்
  3. கே.தனசேகர், குரோம்பேட்டை – ரூ5.68கோடி
  4. சேகர், பல்லவபுரம் – ரூ7.09 கோடி
  5. திலகவதி, திரிசூலம் – ரூ9.43கோடி
  6. சீனிவாசன், பம்மல் – ரூ96.17 இலட்சம்
  7. பிரபாவதி, பம்மல் – ரூ59.62 இலட்சம்
  8. மரியதாஸ், மேற்கு தாம்பரம் – ரூ4.88கோடி

 இந்த எட்டு பேரிடமிருந்து ரூ30கோடி வசூலிக்க வேண்டும் என்று செங்கல்பட்டு ஆர்.டி.ஒ ஆர்.சி எண்.3153/2010 –A dated 3.1.11 &  Rc No.2333/2010- A dated 21.1.11ஆகிய தேதிகளில் அபராதம் விதித்தார்கள்.

 காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித் தலைவருக்கு அபராதத்தை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று மேல்முறையீடு செய்தார்கள்..இந்த மேல்முறையீட்டு மனு 2015 ஜனவரி நிலுவையில் இருந்தது. பிறகு இந்த அபராதம் வசூலிக்கப்பட்டதா, தள்ளுபடி செய்யப்பட்டதா என்ற தகவல்களை, தகவல் பெறும் உரிமைச் சட்டத்தில் கேட்ட போது, தகவல்கள் அளிக்கவில்லை.

 2017ம் ஆண்டில் ரூ30கோடியை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் தள்ளுபடி செய்துவிட்டதாக தெரிகிறது.

 இதே போல் ஸ்ரீபெருபுதூரில் ரூ200கோடி அபராதம் விதிக்கப்பட்டு இருந்தது. அந்த ரூ200கோடியையும் சேர்த்து ரூ230கோடி அபராத்தை தள்ளுபடி செய்ததில்  புவியியல் மற்றும் சுரங்கத்துறை அதிகாரிகள், காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகமும் கூட்டணி அமைத்து பல கோடி இலஞ்சம் பெற்றதாக தெரிகிறது.

 ரூ230கோடி அபராதம் தள்ளுபடி செய்யப்பட்டது தொடர்பாக மக்கள்செய்திமையம் ஆதாரங்களுடன் ஊழல் ஒழிப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரத்தில் புகார் கொடுத்துள்ளது.

  ஊழல் ஒழிப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரகம் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், உயர்நீதிமன்றத்தில் வழக்கு போடுவதை தவிர வேறு வழியில்லை…

 

 

Comments

comments