காஞ்சிபுரம் மாவட்டம் …குன்றுத்தூர் – இடைக்கழிநாடு..பேரூராட்சிகளில் ஊழல்

உள்ளாட்சி அமைப்புகளில் பேரூராட்சி இயக்குநர்களின் நிர்வாக திறமையில்லாத காரணத்தாலும், பேரூராட்சிகளின் தனி அலுவலர்கள் ஊழல்களில் மிதப்பதாலும் பேரூராட்சிகளின் செயல்பாடுகள் முற்றிலும் முடங்கி போய்விட்டது..கோடிக்கணக்கில்  பேரூராட்சிகளில் ஊழல் நடந்துள்ளதை ஆதாரங்களுடம் மக்கள்செய்திமையம் சேகரித்துள்ளது.

  காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் பேரூராட்சியில் 2015-16ல் வணிக வரித்துறைக்கு மதிப்பு கூட்டு வரி செலுத்துவதற்கான ரூ14.89 இலட்சத்திற்கு காசோலை(எண்.513397/31.3.16) தயாரித்துவிட்டு, அந்த காசோலையை வணிகவரி அலுவலகத்துக்கு அனுப்பவே இல்லை. வணிக வரி அலுவலகத்துக்கு அனுப்ப தயாரிக்கப்பட்ட ரூ14.89 இலட்சம் காசோலை வேறு பெயரில் மாற்றப்பட்டுள்ளது. வணிக வரித்துறை தயாரிக்கப்பட்ட ரூ14.89 இலட்சம் காசோலை வணிக வரித்துறை அனுப்பி வைக்கப்படாமல், தனி நபரில் பெயரில் உள்ள கணக்கில் மாற்றப்பட்டது கிரிமினல் குற்றம். குன்றுத்தூர் பேரூராட்சி தனி அலுவலர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்காமல் காப்பாற்றப்பட்டு வருகிறார்…குன்றத்தூர் பேரூந்து நிலையம் அருகே மாற்றுத்  திறனாளிகள் பயன்படுத்தக் கூடிய அதி நவீன கழிப்பிடத்தை பாருங்கள்…

  காஞ்சிபுரம் இடைக்கழிநாடு பேரூராட்சியில் தாமரைக்குளம் ரிவர்ட்டு மண்ட் பணிக்கு ரூ20 இலட்சம் மதிப்பீடு தயாரிக்கப்பட்டது.  தாமரைக்குளம் சித்தாமூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள கொளத்தூர் ஊராட்சியில் இருப்பதால் இடைக்கழிநாடு பேரூராட்சி ரூ5.50 இலட்சம் பொது நிதியிலிருந்து பங்கு செலுத்தினால் போதும், ஆனால் பேரூராட்சி தனி அலுவலர் ரூ.5.50 இலட்சத்துக்கு பதிலாக ரூ18 இலட்சம் கொடுத்துள்ளதாக கணக்கு எழுதியுள்ளார்..

 ரூ12.50 இலட்சம் அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியுள்ளார்.. இடைக்கழிநாடு பேரூராட்சி தனி அலுவலர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை…

  இப்படி 2014-15, 2015-16 ஆகிய இரு ஆண்டுகளில் தமிழகம் முழுவதும் பேரூராட்சிகளில் கோடிக்கணக்கில் ஊழல் நடந்துள்ளது…

  நாளை கோவை மாவட்டம் மோப்பிரிபாளையம் பேரூராட்சியில் நடந்த ரூ5கோடி ஊழலை விரிவாக பார்க்கலாம்….

 

Comments

comments