காஞ்சிபுரம் –திருவள்ளூர் மாவட்டம்…நகராட்சிகளில் ரெய்டும் இல்லை…வழக்கும் இல்லை…விஜிலென்ஸ் அதிகாரிகளுடன் ஊழல் கூட்டணி..

மிழக அரசின் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை அதிகாரிகளுக்கு பத்திரபதிவுத்துறை, ஆர்.டி.ஒ அலுவலகங்களை தவிர மற்ற அரசு அலுவலகங்களில் இலஞ்சம் வாங்கும் அதிகாரிகளை கண்டு கொள்வதே இல்லை.

 2016,2017,2018 ஆகிய மூன்றாண்டுகளில் காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள நகராட்சிகளில் விஜிலென்ஸ் அதிகாரிகள் ரெய்டு நடத்தியதும் இல்லை, ஆதாரங்களுடன் கொடுக்கப்பட்ட புகார் மீது நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. விஜிலென்ஸ் அதிகாரிகளுக்கு மாதா, மாதம் மாமூல் கொடுப்பதாக நகராட்சி ஆணையர்கள், நகராட்சி நகரமைப்பு அதிகாரிகள் வெளிப்படையாக பேசுகிறார்கள்..

 தாம்பரம், பல்லவபுரம், செம்பாக்கம், பம்மல், பூந்தமல்லி, திருவேற்காடு, ஆவடி, மறைமலைநகர் ஆகிய நகராட்சிகளில் தொடர்ந்து 10ஆண்டுகளாக பணியாற்றும் நகரமைப்பு அதிகாரிகள் கடந்த ஐந்தாண்டுகளில் வாங்கிய இலஞ்சம் ரூ1000கோடி.. ஒவ்வொரு நகரமைப்பு ஆய்வாளர், நகரமைப்பு அதிகாரிகள் குறைந்த பட்சம் ரூ100கோடி சொத்து வைத்திருக்கிறார்கள். மனைவி, உறவினர் பெயரில் கட்டுமான நிறுவனங்கள் நடத்தி வருகிறார்கள்.. இதெல்லாம் விஜிலென்ஸ் அதிகாரிகளுக்கு தெரியாதா.. அல்லது நகரமைப்பு அதிகாரிகளிடம் விஜிலென்ஸ் அதிகாரிகள் மாமூல் வாங்கிறார்களா…

 தாம்பரம், பல்லவபுரம், பூந்தமல்லி, திருவேற்காடு, ஆவடி ஆகிய நகராட்சிகள் நடக்கும் ஊழல் தொடர்பாக மக்கள்செய்திமையம்  ஆதாரங்களுடன் விஜிலென்ஸில் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.. நகராட்சிகளின் ஊழல் அதிகாரிகள் விஜிலென்ஸ் அதிகாரிகளுடன் அதிகாரமையத்தில் வலம் வருகிறார்கள்..

 ஆவடி நகராட்சியில் 11 அப்ரூவல்களை சி.எம்.டி.ஏ ரத்து செய்ய உத்தரவிட்டுள்ளது. மேலும் 60 அப்ரூவல்கள் சி.எம்.டி.ஏ ஆய்வு செய்து வருகிறது..அப்ரூவல் முறைகேட்டில் சிக்கிய அதிகாரிகள் சி.எம்.டி.ஏ அதிகாரி கண்காணிப்பு பிளானர் ரூத்ரமூர்த்தியிடம் பேரம் பேசி வருகிறார்கள்..

  தாம்பரம் நகராட்சியில் கடந்த நான்கு ஆண்டுகளில் நடந்த ஊழல் சுமார் ரூ200கோடியை தாண்டும்..

 பல்லவபுரம் நகராட்சி ஆணையர் சிவக்குமார் மீது ஊழல் புகார், விஜிலென்ஸில்ஆதாரத்துடன் கொடுக்கப்பட்டு விசாரணை நிலுவையில் இருக்கும் போதும், நடவடிக்கை எடுக்க நகராட்சி நிர்வாகத்துறை ஆணையருக்கு பரிந்துரை செய்த நிலையில் பதவி உயர்வு கொடுக்கப்பட்டு திருப்பூர் மாநகராட்சி ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்..

 ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநர் திரு ஜெயந்த்முரளி ஐ.பி.எஸ் அவர்களே காஞ்சிபுரம், திருவள்ளூர் நகராட்சிகளில் விஜிலென்ஸ் அதிகாரிகள் மூலம் ரெய்டு நடத்துங்கள், புகாரின் மீது வழக்கு பதிவு செய்யுங்கள்..

 காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள நகராட்சிகளில் நடக்கும் ஊழல்களை விஜிலென்ஸ் கண்டுகொள்ளாது என்று அறிவித்துவிட்டு, ஊழலை ஊக்குவிங்கள்..நாடு நல்லாயிருக்கும்..

 

 

Comments

comments