கலைஞர் கருணாநிதி காவேரி மருத்துவமனை அனுமதி – செயல் தலைவராக மு.க.ஸ்டாலின் – பொதுச் செயலாளர் துரைமுருகன் – பொருளாளர் மகேஷ் பொய்யாமொழி- விரைவில் பொதுக்குழுவில் முடிவு

img-20161201-wa0014getimage

திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி அக்டோபர் 23ம் தேதியிலிருந்து தொண்டர்களை சந்திக்காமல், அறிவாலாயம் வராமல் வீட்டில் ஒய்வெடுத்து வந்தார். ஒவ்வாமை காரணமாக கை,கால்,உடலில் புண் ஏற்பட்ட காரணத்தால் சிகிச்சை பெறுவதாக கூறப்பட்டது. பிறகு தட்டம்மை காரணமாக வெளியே வரவில்லை என்ற தகவல் வெளியானது. தற்போது உடல் நிலை முழுவதும் சரியாகிவிட்ட நிலையில் உடலில் ஏற்பட்டுள்ள சோர்வு, சத்து குறைவு காரணமாக காவேரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

annamkmgr09dmk112THKARUNA_1784910f

 இந் நிலையில் அக்டோபர் 30ம் தேதி மு.க.ஸ்டாலினும், மு.க.அழகிரியும் கோபாலபுரம் வீட்டில் சந்தித்து பேசினார்கள். மீண்டும் திமுகவில் சேர்த்து தென் மண்டல செயலாளர் பதவி கொடுக்க முடிவு செய்யப்பட்டது. மேலும் திமுக தலைவர்  உடல் நிலையை கருதி, செயல் தலைவராக மு.க.ஸ்டாலின், பொதுச் செயலாளராக துரைமுருகன்(அன்பழகனுக்கு பதிலாக), பொருளாளராக மகேஷ் பொய்யாமொழியையும் கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஜனவரி மாதம் நடைபெறும் பொதுக்குழுவில் இறுதி முடிவு எடுக்கப்படும்.

 அனைவரும் ஒன்றாக செயல்பட்டு 2019 எம்.பி தேர்தலில் கணிசமான தொகுதிகளை கைப்பற்ற பணியாற்றவார்களாம்…

 மக்கள்செய்திமையம் 1.12.16 காலை 5மணி

Comments

comments