கரூர் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு கொடுக்க வந்த வயதான பெண்மணியை வலுக்கட்டாயமாக வெளியே தள்ளிய மாவட்ட நிர்வாகத்தினால் பரபரப்பு – பெண் ஆட்சியில், பெண் மனு கொடுக்க கூட முடியவில்லை என்று புகார்

22-08-16 Karur Greevance Day officers mirattal in Public News photo 01

22-08-16 Karur Greevance Day officers mirattal in Public News photo 06

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் கோவிந்தராஜ் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மனு கொடுக்க வந்த, கரூர் மாவட்டம், கடவூர் தாலுக்கா, கஸ்தூரி குரும்பம்பட்டியை சார்ந்தவர் வயதான பெண்மணி சந்திரா, இவருக்கு சொந்தமான வீடு மற்றும் தோட்டத்திற்கு செல்லும் வழியில் அதே பகுதியை சார்ந்த 10 பேர் நிலத்தை அபகரிக்கும் பொருட்டு, ஜே.சி.பி இயந்திரம் வைத்து இரவு நேரங்களில் வீட்டிற்கும், தோட்டத்திற்கும் செல்ல விடாமல் குழி பறித்து நிலத்தை கேட்டு மிரட்டுவதாக புகார் கொடுக்க வந்தார். அப்போது அவர் புகார் தெரிவிக்கும் போது எனக்கு யாருமில்லை என்று கூறி அழுததினால், என் தோட்டத்தில் உள்ள மரங்களை இரவோடு, இரவாக ஜே.சி.பி இயந்திரங்கள் மூலம் வெட்டி எடுத்து வந்து கொண்டு வருகின்றனர். மேலும் கூலிப்படையை வைத்து என்னை கொலை மிரட்டல் விடுவதாக குற்றம் சாட்டிய அவரது மனுவை பார்க்காமல் கூட அப்பெண்மணி அழுததால் வெளியே செல்லும் படி காவல்துறையினருக்கு உத்திரவிட்ட மாவட்ட ஆட்சியர், பெண் ஆட்சியில் பெண் என்றும் பார்க்கமால், வெளியே தூக்கி போடுமாறும் உத்திரவிட்டார்.

22-08-16 Karur Greevance Day officers mirattal in Public News photo 0222-08-16 Karur Greevance Day officers mirattal in Public News photo 03

               இந்த செயலால் மற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்திற்கு வந்த பொதுமக்களும் அச்சத்திற்கு உள்ளாகினர். மேலும் இந்த சம்பவத்தால் பாதிப்படைந்த இந்த வயதான பெண்மணி, நானும் 5 மாவட்ட ஆட்சியர்களுக்கு மேல், சுமார் 4 வருடங்களாக மனு கொடுத்து வருகின்றேன். ஆனால் எனது மனு மீது உரிய விசாரணை எடுக்க தாமதம் செய்ததோடு, தற்போது என்னையே வெளியேற்றுமாறு மாவட்ட ஆட்சியர் நடந்து கொண்டுள்ளார். இதை மாநில முதல்வர் ஜெயலலிதாவிடம் புகார் அளிக்க உள்ளதாகவும் அந்த வயதான பெண்மணி தெரிவித்தார். ஒரு மேல் அதிகாரியே இந்த மாதிரி நடந்தால் இவருக்கு கீழ் பணிபுரியும் அதிகாரிகள் என்னை என்ன செய்வார்கள் என்று கேள்வி எழுப்பியதோடு, என் பிரச்சினையை தமிழக முதல்வர் அம்மா தான் தனிக்கவனம் செலுத்த வேண்டுமென்று வெளியே புழம்பியபடி சென்ற அப்பெண்மணியை அடுத்து சமூக நல ஆர்வலர்களும், பொதுநல ஆர்வலர்களும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

மக்கள்செய்திமையம் 23..8.2016 காலை 5மணி

 

Comments

comments

About Anbu Admin

Check Also

பொள்ளாச்சி…காமவேட்டை- மக்கள்செய்திமையத்துக்கு தொடர் மிரட்டல்..

பொள்ளாச்சியில் பள்ளி மாணவிகளில் தொடங்கி அழகாக வசதியாக இருக்கும் குடும்ப பெண்கள் வரை நாசமாக்கிய  திருநாவுக்கரசு, சதீஷ்,சபரிராஜன், வசந்தகுமார் ஆகிய …

Leave a Reply

Your email address will not be published.