கருத்து சுதந்திரமா..மண்ணாங்கட்டியா..கருத்து சுதந்திரத்தை பேச தகுதி இருக்கிறதா..

எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான தமிழக அரசு என் மீது 23 பொய் வழக்குகள் போட்டு, 2017ம் ஆண்டு ஏப்ரல் 26ம் தேதி கைலியுடன் கைது செய்து, கோவை சிறையில் அடைத்தது. மே 18ம் தேதி குண்டர் சட்டத்திலும் கைது செய்யப்பட்டேன்..

 தினகரன் நாளிதழில் நான் போலி பத்திரிகையாளர் என்று தினமும் செய்தி வெளியிட்டார்கள்.. நக்கீரன் தலைமை நிருபர் பிரகாஷ், நான் போலி பத்திரிகையாளர் என்று சன் டிவியில் பேட்டியும் கொடுத்தார். இதை ஏன் நக்கீரன் ஆசிரியர் ஆர்.ஆர்.கோபால் கண்டிக்கவில்லை. போலி பத்திரிகையாளர் அன்பழகன் கைதுக்கு நன்றி என்று நக்கீரன் அச்சகத்தில்  வால்போஸ்டர் அச்சிடப்பட்டு, தமிழகம் முழுவதும் ஒட்டப்பட்டது.

 நக்கீரனில் 14 ஆண்டுகள் நிருபராக பணியாற்றிய என்னை போலி பத்திரிகையாளர் என்று பேட்டி கொடுப்பது, கைதுக்கு நன்றி என்று வால்போஸ்டர் அடித்து கொடுத்த நக்கீரன் ஆசிரியர் கோபாலுக்கு கருத்து சுதந்திரத்தை பேச என்ன தகுதி இருக்கிறது..

  நக்கீரன் ஆசிரியர் ஆர்.ஆர்.கோபாலை, 124 செக்சனில் கைது செய்தது, செல்லாது என்று எழும்பூர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி, சிறைக்கு அனுப்ப மறுத்தது. இதை மக்கள்செய்திமையம் வரவேற்கிறது.. தமிழகத்தில் கருத்து சுதந்திரம், பத்திரிகை சுதந்திரம் பறிக்கப்பட்டு வருகிறது. அரசின் ஊழல்களை, நிர்வாக சீர்கேடுகளை விமர்சனம் செய்யும் பத்திரிகையாளர்கள் பொய் வழக்கில் கைது செய்யப்படுவது பத்திரிகை ஜனநாயகத்தின் குரல் வளை நெரிக்கப்படுகிறது என்பதில் மக்கள்செய்திமையத்திற்கு மாற்று கருத்து கிடையாது..

 நான் போலி பத்திரிகையாளர் இல்லை என்பதற்கு ஆதாரங்களை வெளியிட்டுவிட்டேன்… நக்கீரன் ஆசிரியர் ஆர். ஆர்.கோபால் என்ன பதில் சொல்லப் போகிறார்…

                             

Comments

comments