கனிம மாபியா முத்துப்பட்டினம் எஸ்.ராமச்சந்திரன் அட்டகாசம்… உள்ளாட்சி அலசல் புத்தக ஏஜெண்டுகளை மிரட்டி பறிமுதல்

1st-wrapper

தமிழகம் முழுவதும் ஏரி, குளம், கண்வாய், ஆறுகளில் மணல், களிமண், மண், கிராவல் , செம்மண் உள்ளிட்ட அனைத்து வகை கனிமங்களை விதிமுறைகளை மீறி, முறைகேடாக அதிகாரவர்க்கத்தின் பின்னணியில் எடுத்து, விற்பனை செய்து வருகிறார் முத்துப்பட்டினம் எஸ்.ராமச்சந்திரன்..

  ஜோசியம் பார்த்துக்கொண்டு இருந்த, எஸ்.ராமச்சந்திரன் நான்காண்டுகளாக அதிகாரவர்க்கத்தின் துணையுடன் கனிமங்களை முறைகேடாக, விதிமுறைகளை மீறி எடுத்து விற்பனை செய்து இன்று கோடீஸ்வரர் பட்டியலில் இடம் பெற்றுள்ளார்.

 தமிழகத்தில் 31 மாவட்டங்களிலும் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் உள்ள மாவட்ட நிர்வாகங்கள் , முத்துப்பட்டினம் எஸ்.ராமச்சந்திரன் கண் அசைவின் கீழ் செயல்படுகிறது. அதாவது தமிழகமே கனிம மாபியா முத்துப்பட்டினம் எஸ்.ராமச்சந்திரன் பிடியில் சிக்கி தவிக்கிறது.

 மாபியா எஸ்.ராமச்சந்திரன் பிடியில் தமிழகம் என்ற செய்தி, உள்ளாட்சி அலசல் வார இதழில் வெளியாகி உள்ளது. இந்த புத்தகம் மக்கள் மத்தியில் விற்பனையாகிவிடக் கூடாது என்பதற்காக மாபியா எஸ்.ராமச்சந்திரன் கும்பல் சென்னையில் விடியற்காலை 3மணிக்கு உள்ளாட்சி அலசல் ஏஜெண்டுகளை மிரட்டி புத்தகத்தை வாங்கி சென்றுள்ளார்கள்.

 இதே போல் தமிழகம் முழுவதும் மாபியா எஸ்.ராமச்சந்திரன் கும்பல் உள்ளாட்சி அலசல் புத்தகத்தை ஏஜெண்டுகளை மிரட்டி பறிமுதல் செய்து வருகிறது.  கனிமங்களை விதிமுறை மீறி, முறைகேடாக எடுத்து விற்பனை செய்யும் முத்துப்பட்டினம்  எஸ்.ராமச்சந்திரனின் அட்டகாசம் எல்லை மீறி போய்க்கொண்டு இருக்கிறது.

 கனிம மாபியா முத்துப்பட்டினம் எஸ்.ராமச்சந்திரன் அட்டகாசங்களை உள்ளாட்சி அலசல் வார இதழ் வன்மையாக கண்டிக்கிறது.

 அடுத்த இதழ் மாபியா முத்துப்பட்டினம் எஸ்.ராமச்சந்திரனின், கனிம திருட்டை, பல ஆதாரங்களுடன் வெளியிட்டு தமிழகம் முழுவதும் சுமார் 20, 000 புத்தகம் இலவசமாக கொடுக்க உள்ளாட்சி அலசல் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

 கனிம மாபியா முத்துப்பட்டினம் எஸ்.ராமச்சந்திரன் அட்டகாசத்தை சந்திப்போம்.. எஸ்.ராமச்சந்திரனின் கனிம திருட்டை ஆதாரங்களுடன் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடிவு செய்யப்பட்டுள்ளது.

 

 

Comments

comments